ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 20 இற்கும் மேற்பட்டோர் பலி, பலர் காயங்களுடன் மீட்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் மலைப் பிரதேசத்தில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவிததுள்ளது. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இதுவரை 42 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளும் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரப்படி நள்ளிரவு 11.47 இற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் ஏற்பட்ட 4 ஆவது நிலநடுக்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் புதுடில்லி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் பாகிஸ்தான் லாகூரில் மாநிலத்திலும் உணரப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் திடீர் திடீரென நில நடுக்கங்கள் ஏற்படுகின்றமை வழமையாகும். இதனால் நில நாடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து மக்கள் இடமடபெயர்ந்து பாதுகாப்பாக இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலைப்பகுதியில் 2015 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பூமிக்கு கீழே 190 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சுமார் 344 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த மாதம் 16, 13 ஆம் திகதிகளில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் பலர் காயமடைந்திருந்தனர். ஆப்கானிஸ்தான் நில நடுக்கம் தொடர்பான ஆய்வுகளை ஆப்கானிஸ்தான் தேசிளய நில அதிர்வு நிலையம் மேற்கொண்டு வருகின்றது. பாதிக்கப்படும் மக்களைக் காப்பாற்றும் செயற்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.