திடீரென மொட்டையடித்துக் கொண்ட நடிகர் சிவராஜ் குமார்

திடீரென மொட்டையடித்துக் கொண்ட நடிகர் சிவராஜ் குமார்

தமிழில் ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ் குமார்.

இவர் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன். இவரது சகோதரர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிவராஜ் குமாருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டமையால் மருத்துவர்களின் அறிவுரையின் கீழ் அமெரிக்கா சென்று சிகிச்சை பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

சிவராஜ் குமார் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால், அதனை சிவராஜ்குமார் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் தன் குடும்பத்தினரோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளதோடு, அவரும் அவரது மனைவியும் முடி காணிக்கை செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This