இதோ வந்துவிட்டது…மனிதர்களைக் குளிப்பாட்டும் வொஷிங் மெஷின்
தற்போதைய நவீன உலகத்தில் அனைத்து விடயங்களுக்கும் மெஷின் கண்டுபிடித்துவிட்டனர். அந்த வகையில் தற்போது ஒரு படி மேலே சென்று ஜப்பானில் மனிதர்களைக் குளிப்பாட்டும் நவீன ஹியூமன் வொஷிங் மெஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த மெஷினே மனிதர்களைக் குளிப்பாட்டி விடும். ஜப்பானின் ஷவர்ஹெட் நிறுவனமான சயின்ஸ் கோ இந்த இயந்திரத்தை கண்டுபிடித்து அதற்கு மிராய் நிங்கன் சென்டகுகி என்று பெயரும் வைத்துள்ளது.
இதற்கு எதிர்காலத்தின் மனித வொஷிங் மெஷின் என்பது பொருளாகும். இந்த இயந்திரமானது, ஒரு மனிதனைக் கழுவ 15 நிமிடங்கள் வரையில் நேரம் எடுத்துக் கொள்கிறது.
அதில் உள்ள ப்ளாஸ்டிக் கதிரையின் மீது மனிதன் ஏறியதும் இயந்திரத்தில் பாதியளவு இளம் சூடான நீர் நிரம்பும். பின் இயந்திரத்திலிருந்து நீர் குமிழ்கள் வெளிவரும்.
இது மனிதனின் தோலலிருக்கும் அழுக்குளை நீக்கும். இதிலிருக்கும் ப்ளாஸ்டிக் மசாஜ் பந்துகள் உடலை மட்டுமல்லாமல் மனதையும் அமைதிப்படுத்தும்.