வைரம், தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட பேனா…
அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று பேனா.
எத்தனையோ வடிவங்களில் பேனாக்கள் உள்ளன.
அந்த வகையில்,ஏலம் ஒன்றில், விலை உயர்ந்த பேனா ஒன்று ஏலம் விடப்பட்டுள்ளது.
இத்தாலி ப்ராண்டான டிபொல்டியால் இப் பேனா உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 8 மில்லியன் ரூபாய்க்கு ஏலம் போன இந்த பேனா நொக்டர்னஸ் ஃபுல்கோர் என்று குறிக்கப்படுகிறது.
இதன் பொருள் ஒளிர்வு என்பதாகும்.
இப் பேனா 123 மாணிக்கக் கற்கள், 945 கருப்பு நிற வைரங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அதன் மூடிப் பகுதியில் சிவப்பு நிற மாணிக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.