
2032 இல் பூமியைத் தாக்கவுள்ள சிறுகோள்…விஞ்ஞானிகள் எச்சரிக்கை
2024 YR4 எனப் பெயரிடப்பட்டுள்ள சிறுகோள் எதிர்வரும் 2032 ஆம் ஆண்டு பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
சுமார் 196 டி விட்டம் கொண்ட இந்த சிறுகோள் 2028 ஆம் ஆண்டு பூமிக்கு மிகவும் அருகில் வரும் எனவும் கூறப்படுகிறது.
இந்தச் சிறுகோள் பூமியைத் தாக்கும் பட்சத்தில் 8 மெகா தொன் ஆற்றல் வெளிப்படும் என நாசா கணித்துள்ளது.
இது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக் கூடியது என்பதால் விண்வெளியில் வைத்தே சிறுகோள் மீது மோதலை ஏற்படுத்தி அதன் பாதையை மாற்றுவதற்கு விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.
CATEGORIES தொழில்நுட்பம்
