தமிழக சட்டசபை தேர்தல்: 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவு

தமிழக சட்டசபை தேர்தல்: 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவு

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் வாக்களித்து வருகின்றனர்.

பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி 70 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுவரை 4,01,40,304 பேர் வாக்களித்துள்ளனர்.

* சென்னையில் வாக்குப்பதிவு -68.13%

* வாக்குப்பதிவு அதிகமாக உள்ள மாவட்டம் – நாமக்கல் 76.43%

* வாக்குப்பதிவு குறைவாக உள்ள மாவட்டம் – கன்னியாகுமரி 61.95%

இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளதுடன், தேர்தல் பெறுபேறுகள் எதிர்வரும் 4ஆம் திகதி வெளியிடப்பட உள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )