சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலையகத்தில் அஞ்சலி

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலையகத்தில் அஞ்சலி

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று  இன்றுடன் (26.12.2024) 20 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி காலை 9.25க்கு இடம்பெற்ற ஆழிப்பேரலையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக அது பதிவானது.

இந்த அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு  மலையகத்தில் இன்று பல்வேறு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றன.

அட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்கள் மற்றும் அட்டன் டிக்கோயா நகர சபையின் ஏற்பாட்டில் அட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என  பலரும் கலந்துகொண்டனர்.

(க.கிஷாந்தன்)

Share This