
போதைப்பொருள் கடத்தல். மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் கைது, மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு போதைப் பொருட்களை கடத்திக் கொண்டு வந்த மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டுபிடிக்க முடியாத முறையில், போதைப் பொருட்களை கடத்திக் கொண்டு வந்து விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த நபர்களிடம் விசாரணை நடததிய பொலிஸார், போதைப் பொருட்களை கடத்திக் கொண்டு வந்த நபர்களையும் விற்பனை செய்தவரையும் கைது செய்துள்ளனர்.
மாசி கருவாடு சம்பல் போத்தலுக்குள் மறைத்து போதை மாத்திரைகளை கொழும்பில் இருந்து கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணையின் போது பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கொழும்பில் உள்ள சில நபர்களை கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
