இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு – ஆணையாளர் தகவல்

இலங்கை இறைவரி திணைக்களம், 2025ஆம் ஆண்டு அதிகளவான வருமானத்தை பெற்றுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.பி.இ. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 90 வருடத்தில் இது மாபெரும் அதிகரிப்பு என்றும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2024/2025ஆம் ஆண்டு நிதியாண்டு மதிப்பீட்டின் பிரகாரம், வருமான வரி அறிக்கையை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம் வரி செலுத்தும் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் மேலும் வருமானம் அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.
தாமதமின்றி ஒவ்வொரு பிஜைகளும் வரி வருமானத்தை முறையாக செலுத்தினால், இலங்கைத்தீவின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக அமையும் எனவும் ஆணையாளர் கூறினார்.
அதேவேளை, வரி செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த தவனைக்குள் வரி செலுத்தத் தவறுவோருக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்தாகவும் ஆனாலும் மீண்டும் ஒரு முறை ஞாபகமூட்டுவதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
