அமெரிக்காவுக்கு கனிமங்கள் – அரிய மண் பொருட்கள் ஏற்றுமதி, சீனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது

அமெரிக்காவுக்கு கனிமங்கள் – அரிய மண் பொருட்கள் ஏற்றுமதி, சீனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் நிறுத்தம் நீடிப்பதைக் குறிக்கும் வகையில், அமெரிக்காவிற்கு முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய மண் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான பல கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ளதாக மின்னிங் (mining) என்ற அவுஸ்திரேலிய ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவ வன்பொருள், குறைக்கடத்திகள் மற்றும் பிற உயர் தொழில்நுட்பத் தொழில்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான கனிமங்கள் மீதான சில ஏற்றுமதி கட்டுப்பாடுகளை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைப்பதாக சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தித் தளம் கூறியுள்ளது.

ஒக்டோபர் 9 ஆம் திகதி முதன்முதலில் விதிக்கப்பட்ட இடைநிறுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில், சில அரிய மண் கூறுகள், லித்தியம் பட்றிப் பொருட்கள் மற்றும் செயலாக்க தொழில்நுட்பங்கள் ஏற்றுமதிக்கான வரம்புகள் உள்ளடங்கும்.

ஒக்டோபர் 30 அன்று தென் கொரியாவின் புசானில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஏற்றுமதி தளர்வுகள் விதிக்கப்பட்டன.

பீஜிங், காலியம், ஜெர்மானியம், ஆண்டிமனி மற்றும் செயற்கை வைரங்கள் மற்றும் போரான் நைட்ரைடுகள் போன்ற உயர்தரப் பொருட்கள் என்று அழைக்கப்படும் பிற பொருட்களின் ஏற்றுமதி மீதான  தடைகளையும் நீக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைகள், சீனா மீதான வோசிங்டனின் விரிவாக்கப்பட்ட குறை கடத்தி ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு பதிலடியாக பரவலாகக் காணப்பட்டன.

சீனா அத்தகைய பொருட்களை “இரட்டை-பயன்பாட்டு பொருட்கள்” என்று வகைப்படுத்துகிறது, அதாவது அவை பொதுமக்கள் மற்றும் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

Share This