ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் 4 பேர் பலி – காயம் 60, கட்டிடங்கள் இடிந்து விழுந்தன

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் 4 பேர் பலி – காயம் 60, கட்டிடங்கள் இடிந்து விழுந்தன
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் 4 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதுவரை 4 பேர் பலியாகியுள்ளார்கள். 60 இற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ரிக்டர் அளவில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ரொய்டர்ஸ் (Reuters) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் 28 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் சுமார் 5.23 இலட்சம் மக்கள் வாழும் மசார்-இ-ஷெரிஃப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

முழுமையான சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் முகமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆப்கானிஸ்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரிய புவித்தட்டுகள் சந்திக்கும் பகுதியில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி பாரிய நிலநடுக்கம் ஏற்படுவதாக நிபுணர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

சர்வதேசரீதியாக நடைபெற்று வரும் புவியியல் மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்குகளில், ஆப்கானிஸ்தானின் இயற்கை அமைவிடம் பற்றி பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This