சட்டநூலில் கைத்துப்பாக்கியை வைக்க உதவிய பெண் சட்டத்தரணியை விசாரிக்க உத்தரவு

சட்டநூலில் கைத்துப்பாக்கியை வைக்க உதவிய பெண் சட்டத்தரணியை விசாரிக்க உத்தரவு
பெண் சட்டத்தரணியை விசாரிக்க உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக் குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைதான இஷாரா செவ்வந்தி வழங்கி வரும் வாக்குமூலத்தின் பிரகாரம் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பெண்  சட்டத்தரணி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைத்துப்பாக்கியை சட்டக்கோவை நூல் ஒன்றில் மறைத்துக் கொண்டு, செவ்வந்தி நீதிமன்றம் வருவதற்கு  இந்த பெண் சட்டத்தரணி உதவி செய்த குற்றச்சாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண் சட்டத்தரணியை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வு பொலிஸாருக்கு இன்று புதன்கிழமை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி, கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு சாட்சிக் கூண்டில் நின்றபோது, கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

இச் சம்பத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு குற்றப் புலனாய்வு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த செவ்வந்தியும், சில சந்தேகநபர்களும் சென்ற 14 ஆம் திகதி நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, கொழும்புக்கு கொண்டு வரப்பட்டனர்.

Share This