அரசாங்கத்துக்கு எதிரான பேராணியில் சஜித் அணி இல்லை. ஆனால் ஒத்துழைப்பு என தகவல்

அரசாங்கத்துக்கு எதிரான பேராணியில் சஜித் அணி இல்லை. ஆனால் ஒத்துழைப்பு என தகவல்
அரசாங்கத்துக்கு எதிரான பேராணியில் சஜித் அணி இல்லை

அநுர அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள எதிர்ப்பு பேரணியில் சஜித் தலைமையிலாக ஐக்கிய மக்கள் சக்தி பங்குகொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் இணைந்து பங்குகொள்ளவுள்ளன.

நுகேகொடையில் நடைபெறவுள்ள அநுர அரசுக்கு எதிரான பேரணியில் பொது அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகளும் பங்குகொள்ளவுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி பங்குகொள்ளும் என முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. அதற்கான பேச்சுக்களும் நடைபெற்றிருந்தன. ஆனாலும் இப் பேராணியில் பங்கொள்ளவில்லை எனவும், ஆனாலும் அநுர அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கும் என்றும் கட்சியின் மூத்த உறுப்பினர், சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோரை இணைத்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியாக செயற்படுவது குறித்து பேச்சுக்கள் தொடர்ந்தும் நடைபெறுவதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

Share This