கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து விபத்து, ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணத்தி பேருந்து விபத்து, ஒருவர் பலி
கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று அதிகாலை விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்தார். பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர்.
நேற்று 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த பலர் வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிலருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது என்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
