ரசிய – உக்ரெயன் போர் நிறுத்த முயற்சி இடம்பெறுமா என்பது தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. ஹங்கேரியில் நடைபெறவுள்ள பேச்சில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரசிய ஜனாதிபதி விளாடிமின் புட்டின் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி புட்டின் ஹங்கேரிக்கு செல்லும் வழியில், தமது நாட்டு வான் வழியாக சென்றால் கைது செய்யப்படுவார் என போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி எச்சரிக்கைவிட்டுத்துள்ளார். இதனால் பெரும் புட்டினின் ஹங்கேரி பயணம் இடம்பெறுமா என சந்தேகம் எழுந்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடொன்றின் வான்பரப்பின் ஊடகவே ரசிய ஜனாதிபதி ஹங்கேரிக்குச் செல்ல வேண்டும். ஆனால் ஹங்கேரி வான்பரப்பின் ஊடாக பயணம் செய்ய முடியுமென ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் தெரிவித்திருக்கிறார். தனது நாட்டுக்கு பேச்சுக்கு வந்து செல்லும் வரை புட்டினுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறியதாக ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவை பெற்று ரசிய ஜனாதிபதி புட்டினை கை செய்யவுள்ளதாக போலந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

உக்ரெய்னின் மனிதகுலத்துக்கு எதிரான பெரும் குற்றங்களை புட்டின் புரிவதாகவும், சர்வதேச நீதிமன்ற விதிகளின் பிரகாரம் அவ்வாறான குற்றம் புரியும் அரசியல் தலைவர்களை தமது நாட்டுக்குள் அனுமதிக்கவோ அல்லது தமது நாட்டு வான்பரப்பில் பயணிக்கவோ அனுமதிக்க முடியாது என்று பேலந்து வெளியுறவு அமைச்சர் எடுத்துக் கூறியுள்ளார்.

அதேவேளை, நாசவேலைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு நபர்களை போலந்து அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளதாக பிரதமர் டொனால்ட் டஸ்க் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

உக்ரெய்ன் நாட்டுக்கு ஆதரவளிக்கும் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு எதிரான நாசகார வேலைகளில் ஈடுபடும் ரசிய உளவாளிகளே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

இப் பின்னணியில் தான், ரசிய ஜனாதிபதியின் ஹங்கேரி பயணத்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.