தமிழரக் கட்சியின் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினரின் வீடு தீக்கிரை, திட்டமிட்ட செயலா?

தமிழரக் கட்சியின் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினரின் வீடு தீக்கிரை, திட்டமிட்ட செயலா?
தமிழரக் கட்சியின் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினரின் வீடு தீக்கிரை

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவாநந்தனின் வீடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்றபோது தான் வீட்டில் இருக்கவில்லை எனவும் தனது தயார் மாத்திரமே இருந்தாகவும் சிவாநந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்களில் வந்த சிலர் வீட்டுக்குத் தீயிட்டதாக சிவாநந்தனின் தாயர் தெரிவித்துள்ளார். அதேவேளை தீ விபத்து இயல்பாக ஏற்படவில்லை எனவும் திட்டமிட்ட செயல் என்றும் குற்றம் சுமத்தியுள்ள சிவாநந்தன், இது அரசியல் பழிவகலா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share This