காசாவில் மீண்டும் பதற்றம், கமாஸ் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் என்கிறது இஸ்ரேல்

காசாவில் மீண்டும் பதற்றம், கமாஸ் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் என்கிறது இஸ்ரேல்
காசாவில் மீண்டும் பதற்றம், கமாஸ் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் என்கிறது இஸ்ரேல்

இஸ்ரேல் – கமாஸ் போர் நிறுத்தம் செய்யப்பட்ட பின்னர் காசாவில் அமைதி நிலவவில்லை. காசாவில், இஸ்ரேல் – கமாஸ் மோதல் தற்போதைக்கு முடிவடையாது என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் தற்காலிகமானது எனவும் நெதன்யாகு விளக்கியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரட்ம்ப் எடுத்த முயற்சியினால், போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஆனால் காசாவில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவம் காசாவில் கமாஸ் இராணுவத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு தயார் நிலையில் இருப்பதாகவும் ஆனால், அவ்வாறான செயற்பாடுகள் எதிலும் தாங்கள் ஈடுபடவில்லை என்றும் கமாஸ் கூறியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குச் சவால்விடும் கருத்துக்களை வெளியிட்டு வருவதால், பதற்ற நிலை காணப்படுவதாக பாலஸ்தீன செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர், ஹமாஸ் இயக்கம், தாங்கள் கைது செய்து தடுத்து வைத்திருந்த 20 பேரை விடுதலை செய்துள்ளது. இஸ்ரேல் அரசு 135 பாலஸ்தீனியர்களின் உடல்களையும், 2,000 கைதிகளையும் விடுவித்திருந்தது.

இந்த நிலையில் மீண்டும் போர்ச் சூழல் ஏற்பட்டும் அபாயம் இருப்பதாக பலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை இஸ்ரேல் பிரதமர் தொடர்ந்து போரை நடத்தக் கூடிய ஏற்பாடுகளிலும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாகவும் இதனால் போர் பதற்றம் நிலவுவதாகவும் கமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹமாஸ் இயக்கம் தாக்குதல்களை முற்றாக நிறுத்த வேண்டும் இல்லையேல், கமாஸ் இயக்கம் மீது நேரடி இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கமாஸ் இயக்கத்தை நிரந்தரமாக அழிப்பதன் மூலமாகவே காசாவில் நிரந்த அமைதியை ஏற்படுத்த முடியும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஊடகங்களில் கூறி வருகிறார். போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் நெத்தன்யாகு அவ்வாறு கூற முடியதெனவும், போர் நிறுத்த ஒப்பந்த நிகழ்வில் பங்குபற்றிய நாடுகளின் தலைவர்கள் பொறுப்புடன் பதில் தர வேண்டும் எனவும் கமாஸ் கோரியுள்ளது.

 

 

Share This