இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம், டொனால்ட் ட்ரம் முன்னிலையில் எகிப்தில் கைச்சாத்து

இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம், டொனால்ட் ட்ரம் முன்னிலையில் எகிப்தில் கைச்சாத்து
இஸ்ரேல் கமாஸ் போர் நிறுத்தம், டொனால்ட் ட்ரம் முன்னிலையில் எகிப்தில் கைச்சாத்து

பாலஸ்தீனத்தில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று திங்கட்கிழமை கைச்சாத்திடவுள்ளது. எகிப்து நாட்டில் நடைபெற்றவுள்ள இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளவுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் மீண்டும் போர் எழக்கூடிய நிலைமைகள் தவிர்க்கப்படும் என்றும் அதற்கு ஏற்ப இஸ்ரேல் – ஹமாஸ் இயக்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ரொயடர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருபது அம்சங்களை உள்ளடக்கிய ஒப்பந்தம் இஸ்ரேல் பாலஸ்தீன உறவுக்கும் பாலஸ்தீன மக்களின் அரசியல் விடுதலைக்கும் ஏற்ற முறையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, கந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் மற்றும் காயமடைந்து அங்கவீனமடைந்துள்ள மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

Share This