இலங்கை நிதி நிலைமை, உலக வங்கியின் தலைவருடன் உரையாடல்

அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தி வரும் நிலையில், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் சம்பளத் திட்டம் மிகக் குறைவாகவும் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
மிதிப்பீடு ஒன்றை செய்து ஊழியர் எண்ணிக்கையை குறைத்தால் வினைத்திறன் அதிகரிக்கும் எனவும் உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவோர்க் சாக்ஸி (Kevork Sarkisian) சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் உள்ள கெவோர்க் சாக்ஸியன் தலைமையிலான குழுவினர் அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்போது இலங்கையின் தற்போதைய நிதி நிலைமைகள் பற்றி உரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று செவ்யாக்கிழமை சந்தித்து உரையாடிய நிலையில், உலக வங்கியின் தலைவருடன் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அரச நிறுவனங்கள் பலவற்றின் வினைத்திறன் போதியதாக இல்லை. சில நிறுவனங்களை தனியாரிடம் கையளிக்க வேண்டும். அத்துடன் மின்வச் சக்தியை பெறும் வழிமுறைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என கெவோர்க் சாக்ஸியன் இச் சந்திப்பில் பரிந்துரைத்துள்ளார்.
தற்போதைய நிலையில் குறிப்பிடத்தக்களவு பொருளாதார மீட்சி ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அது போதியதாக இல்லை. கடன்கள் மீளச் செலுத்தப்பட வேண்டும். புதிய கடன்களை பெறும் வழிமுறைகளில் மாற்றங்களை செய்ய உலக வங்கி தீர்மானித்துள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதேநேரம், சுற்றுலத்துறையின் மூலம் அதிகளவு வருமானம் ஈட்டப்படுவதாகவும் மேலும் சுற்றுத்துறையை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் மற்றும் வருமானத்தை அதிகரக்கும் வெறு புதிய திட்டங்கள் பற்றிய முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அரச நிதிக் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.