பாலஸ்தீனம் தனி நாடா? மறுக்கிறார் இஸ்ரேலிய பிரதமர், அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் பதில் என்கிறார்

பாலஸ்தீனம் தனி நாடா? மறுக்கிறார் இஸ்ரேலிய பிரதமர், அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் பதில் என்கிறார்
பாலஸ்தீனம் தனி நாடா? மறுக்கிறார் இஸ்ரேலிய பிரதமர்

எந்த ஒரு சர்வதேச நாடுகளும் பாலஸ்தீன பிரதேசத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடியாது என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார். பிரிட்டன், கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தன.

இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட இஸ்ரேலிய பிரதமர், பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு இல்லை எனவும் கூறியிருக்கிறார். ஆனால் இது தொடர்பாக அமெரிக்கா எதுவும் தெரிவிக்கவில்லை.

தற்போது அமெரிக்காவில் உள்ள நெதன்யாகு இஸ்ரேலுக்கு திரும்பிய பின்னர் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவுள்ளதாக அறிவித்த நாடுகளுக்கு உரிய முறையில் பதிலளிப்பர் என்று இஸ்ரேலிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பயங்கரவாதத்துக்கு அவுஸ்ரேலியா, பிரித்தானிய போன்ற நாடுகள் ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தியுள்ள இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, கமாஸ் இயக்கம் பல்லாயிரம் இஸ்ரேலிய மக்களையும் இஸ்ரேலிய இராணுவத்தையும் கொலை செய்துள்ளது எனவும் இவ்வாறான பயங்கரவாத செயலை ஐரேப்பிய நாடுகள் ஏற்றுக் கொள்கிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேநேரம் இஸ்ரேலிய இராணுவம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் இருந்து இன்று வரை சுமார் 63 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை கொலை செய்துள்ளது எனவும் கடந்த சில நாட்களாக குழந்தைகள், முதியோர் என ஆயிரத்துக்கும் அதிமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பிபிசி ஆங்கில செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அதேவேளை பயங்கரவாத அமைப்புகளுக்கு இடமளிக்கும் வகையில் பிரித்தானியா ஏனைய சர்வதேச நாடுகளையும் தூண்டிவிடுவதாக குற்றம் சுமத்தியுள்ள இஸ்ரேலிய அரச ஊடகங்கள், ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனம் தனி நாடு என்பதை அங்கீகரிக்க முடியாது எனவும் அமெரிக்கா இந்த நாடுகளுக்கு உரிய முறையில் பதிலளிக்கும் என நம்புவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

 

 

Share This