பேச்சு நடைபெற்றபோது, ஹமாஸ் இயக்கத் தலைவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

பேச்சு நடைபெற்றபோது, ஹமாஸ் இயக்கத் தலைவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

மத்திய கிழக்கு நாடான கட்டார் தலைநகர் டோகாவில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்த ஹமாஸ் இயக்கத் தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை என கட்டார் அரசு அறிவித்துள்ளது.

இது சமாதான பேச்சை விரும்பவில்லை என்பதை அறிவிக்கும் தாக்குதல் என கட்டார் அரசு இஸ்ரேலை கண்டித்துள்ளது.

இஸ்ரேலுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போரை நிறுத்த, அமெரிக்க ஒத்துழைப்புடன் பேச்சுகள் கட்டார் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

அதேவேளை, பேச்சுவார்த்தையின் போது சிலவேளை தாக்குதல் நடத்தக் கூடும் என அமெரிக்க ஏற்கனவே கட்டார் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக அமெரிக்க கூறியுள்ளது. ஆனால் அமெரிக்கா கூறியதை கட்டார் அரசு மறுத்துள்ளது.

தாக்குதல் எச்சரிக்கை எதனையும் அமெரிக்க விடுக்கவில்லை என்றும் கட்டார் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

பலஸ்தீனத்தில் போரை நிறுத்துவது தொடர்பாக இஸ்ரேல் அரசுக்கு சர்வதேச மட்டத்தில் பல அழுத்தங்கள் இருந்தபோதும், இஸ்ரேல் அதனை பொருத்தப்படுத்தமால் தொடர்ந்து போரில் ஈடுபடுகின்றது.

ஆனால் கமாஸ் இயக்கம் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ள நிலையில், பேச்சுக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் தான் கட்டார் நாட்டில் இடம்டபெற்ற பேச்சுன்போது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

ஆனாலும் பேச்சுக்கான முயற்சிகள் தொடரும் என அமெரிக்க அறிவித்திருக்கிறது. தாக்குதலை நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

Share This