ரணிலின் முன்னாள் செயலாளர் மீது தொடர்ந்து விசாரணை, குற்ற புலனாய்வு பிரிவு விளக்கம்

ரணிலின் முன்னாள் செயலாளர் மீது தொடர்ந்து விசாரணை, குற்ற புலனாய்வு பிரிவு விளக்கம்
ரணிலின் முன்னாள் செயலாளர் மீது தொடர்ந்து விசாரணை

அரசாங்கத்தின் பொது நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மீண்டும் விசாரணைக்கு உடபடுத்தப்பட்டு வருகிறார்.

ஒவ்வொரு தடவையும் நடைபெறவுள்ள விசாரணைகளுக்காக சமன் எக்கநாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்நிலையாக வேண்டிய தேவை இல்லை எனவும், அவருடைய வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைத்து விசாரணைகள் நடத்தப்படும் என்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசாரணைகள் நடத்தப்படும் முறைமைகள் தொடர்பாக அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை இந்த விவகாரம் குறித்து தொடர்புடைய வேறு சில அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share This