கஸ்பியன் உப்பு நீர் கடல் ஏரி சுருங்குவதாக எச்சரிக்கை. துறைமுக செயற்பாடுகளுக்கும் பாதிப்பு

கஸ்பியன் உப்பு நீர் கடல் ஏரி சுருங்குவதாக எச்சரிக்கை. துறைமுக செயற்பாடுகளுக்கும் பாதிப்பு
கஸ்பியன் உப்பு நீர் கடல் ஏரி சுருங்கி வருவதாக எச்சரிக்கை.

மேற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்தில் ரஷியா, கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஈரான், அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளுக்கு மையமாக அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய உப்புநீர் ஏரியான கஸ்பியன் (Caspian) கடல், மிக வேகமாக சுருங்கி வருவதாக சர்வதேச செயதி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கஸ்பியன் ஏரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 27 மீற்ரர் கீழே அமைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் நீர் மட்டம் 0.93 மீற்ரா் குறைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் 1.5 மீற்றரும், கடந்த 30 ஆண்டுகளில் 2.5 மீற்றரும் நீர் மட்டம் குறைந்துள்ளதாக சுற்றுப்புறச் சூழல் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஏரி மேலும் வேகமாகச் சுருங்கினால் மிகப் பெரிய சுற்றுப்புறச் சூழல் ஆபத்துகள் ஏற்படும் எனவும் ஏரியில் வாழும் மீன்கள் உட்பட கடல்வாழ் உயிரினங்கள் இறக்கும் ஆபத்துகளும் உண்டு. அத்துடன், விலங்குகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும் எனவும் சுற்றுப் புறச்சூழல் அதிகாரிகள் நேற்று செவ்யாக்கிழமை எச்சரித்துள்ளனர்.

உலகில் மனிதர்களின் நடத்தை காரணமாக பாதிக்கப்பட்டு வரும் இயற்கைச் சமநிலை மனிதர்களுக்கு மேலும் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் ஆகவே இயற்கையை பாதுகாக்க வேண்டும் எனவும் சூழலியளாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கஸ்பியன் ஏரி சுருங்கி வருவதால், எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து, துறைமுகச் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என அஜர்பைஜான் அரசு கவலை வெளியிட்டுள்ளது.

அதேவேளை கஸ்பியன் கடல் நீர் ஏரி, நிலத்தால் சூழப்பட்டிருந்தாலும், அதன் பெரிய அளவு மற்றும் உப்புத் தன்மை காரணமாக இதை ‘கடல்’ என்றும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This