ரசிய அணுமின் நிலையங்கள் மீது உக்ரெயன் தாக்குதல்! உயிர்ச் சேதங்கள் இல்லையென அறிவிப்பு

ரசிய அணுமின் நிலையங்கள் மீது உக்ரெயன் தாக்குதல்! உயிர்ச் சேதங்கள் இல்லையென அறிவிப்பு
ரசிய அணுமின் நிலையங்கள் மீது உக்ரெயன் தாக்குதல்

ரசியாவின் அணுமின் நிலையம் மீது உக்ரெய்ன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை ரசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எரிசக்தி நிலையங்கள் தாக்னுகுதலுக்கு உள்ளாகியுள்ளன. அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது. உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் முக்கிய பகுதிகள் தீயில் எரிந்துள்ளதாகவும் ரசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரசியாவிடம் இருந்து 34 வருடங்கள் நிறைவுபெற்ற நாள் உக்ரெய்னில் கொண்டாப்பட்டது எனவும் அன்றைய தினமே ரசியாவின் அணு மின் நிலைங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இத் தாக்குதல் தொடர்பாக உக்ரெயன் இதுவரை ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை.

இத் தாக்குதலுக்கு ரசியா பதில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 15 ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெற்ற அமைதியை ஏற்படுத்தும் பெச்சுவார்த்தையின் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், சமாதான பேச்சுக்கு இனிமேல் இடமில்லை என ரசிய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

 

 

Share This