ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது….வந்துவிட்டது பொலிஸ் ரொபோ
மருத்துவம், கல்வி என அனைத்து துறைகளிலும் ரொபோக்களின் பங்கு அதிகரித்துவிட்டது.
இந்நிலையில், அடுத்தகட்டமாக சீனாவில், ஏஐ தொழிநுட்பத்துடன் கூடிய கோள வடிவிலான பொலிஸ் ரொபோ வீதிகளில் ரோந்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றது. குற்றவாளிகளை துரத்திப் பிடிக்கவும், நீர் மற்றும் நிலத்தில் தடையின்றி செயல்படும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரொபோ பொலிஸாருடன் சேர்ந்து ரோந்து செல்கிறது. மணிக்கு சுமார் 35 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்படி இதில் மேம்பட்ட சென்சார்கள் உள்ளன.