“கடவுளே அஜித்தே” என்ற கோஷம் வேண்டாம் – அஜித் குமார் அறிக்கை

“கடவுளே அஜித்தே” என்ற கோஷம் வேண்டாம் – அஜித் குமார் அறிக்கை

ரசிகர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படம் வெளிவந்தாலோ அல்லது ரசிகர் மன்ற கூட்டம் நடைபெற்றாலோ அவர்கள் யாருக்கு ரசிகரோ அவரைப் பற்றி புகழ்ந்து பேசுவது வழக்கம்.

அந்த வகையில் அண்மைக் காலமாக அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் “கடவுளே அஜித்தே” என்று கூறி வந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு கூறுவது தன்னை கவலையடையச் செய்திருக்கிறது என்று நடிகர் அஜித் குமார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘சமீபமாக முக்கிய நிகழ்வுகளில், பொது இடங்களில் அநாகரீகமாக தேவையில்லாமல் எழுப்பப்படும் க…..அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. என் பெயரோடு வேறு எந்தப் பெயரையும் சேர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும்.

எனவே இவ்வாறு பொது இடங்களில் ஏற்படுத்தும் அசௌகரியத்தை நிறுத்துமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். எனது இந்தக் கோரிக்கையை மதிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். யாரையும் நோகடிக்காமல் உழைத்து உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள். மற்றும் சட்டத்தை மதித்து நல்ல குடிமக்களாக இருங்கள்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள். வாழு வாழ விடு’ என்று குறிப்பிப்பட்டுள்ளது.

Share This