புனேவில் மரத்தில் மோதிய கார்…இரண்டு பயிற்சி விமானிகள் உயிரிழப்பு
மராட்டிய மாநிலம், புனே மாவட்டத்தில் காரொன்று மரத்தின் மீது மோதியதில் இரண்டு பயிற்சி விமானிகள் உயிரிழந்துள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், “நேற்று அவர்கள் தங்கள் அறையில் மது அருந்தியுள்ளனர்.
இரவு உணவு உண்டதன் பின்னர் சொகுசு காரில் ஏறி பிக்வானை நோக்கிச் சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த கார் பாராமதி – பிக்வான் வீதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதியுள்ளது.
இதனால் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.