இந்தப் பொருட்கள் கீழே சிந்திவிட்டதா? அதற்கான பலன் இதுதான்
சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் நம் கை தவறி கீழே விழுந்து சிதறிவிடும்.
அவ்வாறு சிந்தும் பொருட்களுக்குக் கூட பெரியவர்கள் பலன் கூறியிருக்கிறார்கள். அது பற்றி பார்ப்போம்.
மஞ்சள் – மஞ்சள் கீழே சிந்தினால், மங்கலம் அல்லது சிறப்பு எனப் பொருள்படுகிறது. நீங்கள் ஏதேனும் புதிய தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்றால் அது சிறப்பாக நடக்கும் என்று நம்பப்படுகிறது.
எண்ணெய் – எண்ணெயை கை தவறி கீழே சிந்த விட்டீர்கள் என்றால், அவச் செய்தி அல்லது இழப்பு என்று பொருள்படுகிறது. அதாவது, நீங்கள் எதாவது வியாபாரம் செய்பவராக இருந்தால் பொருள் நெருக்கடி தடை போன்றவை ஏற்படும்.
தேங்காய் – தேங்காய் கீழே விழுந்தால், தடை அனைத்தும் நீங்கும். பணவரவு அதிகரிக்கும்.
சீனி – சீனி கீழே சிந்தினால், புகழ் கிடைக்கும். மேன்மை ஏற்படும்.
உப்பு – உப்பு கீழே சிந்தினால் பண விரயம் அல்லது பணத்தடை ஏற்படும்.
பால் – பால் கீழே கொட்டப்படும் நிலையில் தோல்வி அல்லது கலகம் ஏற்படும்.
குங்குமம் – குங்குமம் கீழே சிந்தப்படும் போது அது மிகப்பெரிய அபசகுணமாக பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் குங்குமம் கீழே கொட்டினால் வெற்றி அல்லது அனுகூலம் ஏற்படும்.
அரிசி – அரிசியை கீழே சிந்தவிட்டால், குடும்பப் பிரச்சினை, காரியத் தடை ஏற்படும்.
மலர்கள் – மலர்கள் கைதவறி கீழே விழும் பட்சத்தில் செல்வம், சுகம் கிடைக்கும்.