புத்தாண்டில் எண்ணெய் வைத்து நீராடும் அரச விழா

புத்தாண்டில் எண்ணெய் வைத்து நீராடும் அரச விழா

சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தலையில் எண்ணெய் வைத்து நீராடும் வருடாந்த அரச அபிஷேகச் சடங்கு நாளை 16 ஆம் திகதி புதன்கிழமை காலை 9:04 க்கு நடைபெறவுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயகர்கள் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறும்.

அமைச்சர்கள் அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலா பங்கொள்வார்கள் என்று ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. சித்திரைப் புத்தாண்டுக்கு அடுத்து வரும் நல்ல நேரத்தில் தலையில் எண்ணெய் வைத்து நீராடுவது சிங்கள மக்களின் மரபாகும். எண்ணெய் வைத்து நீராடிய பின்னரே அவர்கள் தங்கள் வழமையான பணிகளுக்குச் செல்வர்.

Share This