கையடக்கத் தொலைபேசிகளில் எச்சரிக்கை வாசகங்கள்…
இன்றைய நவீன காலத்தில் கையடக்கத் தொலைபேசிகள் இல்லாமல் வாழவே முடியாது என்றாகிவிட்டது.
அதிக நேரம் கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்துவதால் உடலுக்கு பல தீங்குகள் ஏற்படுகின்றன என்று அறிவுறுத்தப்பட்டாலும் அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை.
இதனால் ஸ்பெயின் அரசு அதிரடியான நடிவடிக்கையொன்றை எடுத்துள்ளது.
அதாவது புகையிலை மற்றும் சிகரெட் பக்கெட்டுகளில் எழுதப்பட்டிருக்கும் எச்சரிக்கை வாசகங்கள் போல இனி ஸ்பெயினில் விற்கப்படும் கையடக்கத் தொலைபேசிகளிலும் எழுதப்பட்டிருக்கும்.
கைடயக்கத் தொலைபேசி பொது சுகாதார தொற்றுநோய் எனக் குறிப்பிடும் அவ் அரசு, அதிக நேர தொலைபேசி பாவனையை தடுக்கும் விதமாகவே இதனை முன்னெடுத்துள்ளது.
13 வயது வரையில் உள்ள குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இக் குழு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் 3 வயது வரையில் குழந்தைகளுக்கு எந்தவொரு டிஜிட்டல் சாதனமும் கொடுக்கக் கூடாது.
6 வயது குழந்தைக்கு தேவையான சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசி கொடுக்கலாம்.
இது தவிர 6 முதல் 12 வயது வரையில் இணையம் இல்லாத தொலைபேசிகளை குழந்தைகள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.