கட்டி தொங்கவிடப்படும் வாழைத்தார்கள்…காரணம் என்ன?
நாம் அனைவரும் கடைகளில் பொருட்கள் வாங்கப் போகும் போது எல்லா பொருட்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆனால், வாழைத்தார் மட்டும் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும்.
ஏன்? எதனால்? வாழைத்தார் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளது என்று என்றாவது சிந்தித்ததுண்டா?
பொதுவாகவே வாழைத்தாரிலுள்ள பழங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பழுக்காது.
ஆனால், வீடுகளில் வாங்கி வைக்கப்படும் வாழைப்பழச் சீப்பு ஒரே நாளில் பழுத்துவிடும்.
எனவே, வாழைத்தாரை கட்டி தெங்விடும்போது அவை பழுப்பதற்கான காலம் தாமதப்படுத்தப்படுகிறது.
பொதுவாகவே வாழைத்தாரிலிருந்து எத்திலீன் எனப்படும் கேஸ் வெளிவருகிறது.
அந்த கேஸ் வெளியாகும் காரணத்தால்தான் வாழைக்காய் பழுக்க ஆரம்பிக்கும்.
வாழைக்காய்களை ஒரே இடத்தில் வைக்கும்பட்சத்தில் எத்தலீன் கேஸ் உருவாகி அனைத்து காய்களையும் பழுக்கச் செய்துவிடும்.
அதுவே, வாழைத்தாரை தொங்கவிடும்போது எத்தலீன் கேஸ் சீராக பரவி குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் வாழைக்காய்கள் பழுக்க ஆரம்பித்துவிடும்.
இதனால்தான் கடைகளில் மற்றும் வீட்டு விசேஷங்களின்போது வாழைத்தாரை கட்டி தொங்க விடுகிறார்கள்.