பூட்டான் மன்னர் – மோடி சந்திப்பு…இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்த உறுதி

பூட்டான் மன்னர் – மோடி சந்திப்பு…இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்த உறுதி

பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் மற்றும் ராணி ஜெட்சன் பெமா வாங்சுக் மற்றும் அந் நாட்டு அரசாங்கத்தின் தலைமை அதிகாரிகள் ஆகியோர் இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளனர்.

டில்லியை வந்தடைந்த அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பூட்டான் மன்னர் வாங்சுக் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை தனித்தனியாக சந்தித்துப் பேசியுள்ளார்.

இச் சந்திப்பில் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தல் தொடர்பில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கலந்துரையாடலின் போது பூட்டானின் 13 ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அந் நாட்டுக்கான வளர்ச்சி உதவியை இரண்டு மடங்காக்கியதை பிரதமர் மோடி சுட்டிக் காட்டியதோடு, பூட்டானுக்கான பொருளாதார வளர்ச்சிக்கான இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இச் சந்திப்பைத் தொடர்ந்து மன்னரையும் ராணியையும் கௌரவிக்கும் விதமாக பிரதமர் மோடி அவர்களுக்கு மதிய விருந்து அளித்து உபசரித்துள்ளார்.

Share This