சுற்றுலா சென்ற மாணவிகள் 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

சுற்றுலா சென்ற மாணவிகள் 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகா கொத்தூர் பகுதியில் இயங்கி வரும் அரச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 46 மாணவிகள் மற்றும் 6 ஆசிரியர்கள் என மொத்தம் 52 பேர் உத்தரகன்னடா மாவட்டத்துக்கு கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்நிலையில், மாணவிகள் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது ஏழு மாணவிகள் கடலின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அச் சமயத்தில் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்குண்டு ஏழு பேரும் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனைப் பார்த்தவுடன் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் அவர்களைக் காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

அந்த முயற்சியில் மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்ற நால்வரையும் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் நால்வரும் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் பொலிஸார் கடலுக்குள் இறங்கி மூழ்கியவர்களைத் தேடியதில் ஒரு மாணவியின் உடல் மீட்கப்பட்டது.

ஏனையவர்களை மீட்க முடியவில்லை. உயிரிழந்த மற்ற மூவரின் உடல்களையும் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

Share This