2025இல் மனிதர்கள் வேற்றுக்கிரகவாசிகளை சந்திப்பார்கள்…நோஸ்ட்ரோதோமஸ், பாபா வங்காவின் குறிப்பு
மிகவும் புகழ்பெற்ற ஜோதிடர்களான நோஸ்ட்ரோதோமஸ் மற்றும் பல்கேரியாவைச் சேர்ந்த ஆன்மீகவாதி பாபா வங்கா ஆகியோர் எதிர்காலத்தை கணித்துக் கூறுவதில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர்கள்.
அந்த வகையில் நோஸ்ட்ரோதோமஸ் 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் முக்கிய சக்திகளுக்கு இடையில் யுத்தம் நடைபெறும் என்றும் கணித்துள்ளார்.
அவரது கணிப்பின்படி, உலகில் நடக்கும் யுத்தம் ஒரு பெரிய பொருளாதார சரிவைச் சந்திக்கும். அமைதியின்மை மற்றும் சமூக எழுச்சிக்கும் வழிவகை செய்யும்.
மெக்சிக்கோ, இலத்தீன், அமெரிக்கா, ஐரோப்பாவின் சில பகதிகளில் பாரிய பொருளாதார சரிவு ஏற்படும்.
இது பல சவால்களை கொண்டு வரும். பணவீக்கம், வர்த்தக பதட்டங்கள், பொருளாதார சமத்துவமின்மை ஆகியவை அதிகரிக்கும்.
அதேபோல் பாபா வங்காவின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் மனிதன் வேற்றுக்கிரகவாசிகளை சந்திப்பார்கள். மாபெரும் நிகழ்ச்சியொன்றில் அவர்கள் தங்களை வெளிக்காட்டுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.