இந்த ஆண்டில் 104 பத்திரிகையாளர்கள் கொலை
உலகளாவிய ரீதியில் இந்த வருடம் 104 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இக் கொலைகளில் அரைவாசி காஸாவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் காஸா – இஸ்ரேல் போரின்போது சம்பவ இடத்துக்கு தகவல் சேகரிக்கச் சென்ற 55 பலஸ்தீனிய ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர்.
கடந்த வருடத்தைப் பார்க்கிலும் இந்த வருடம் இறப்புகள் குறைந்திருந்தாலும் இந்த ஆண்டு கூட பத்திரிகையாளர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா போரில் சுமார் 138 பலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக ஆசிய நாடுகளில் சுமார் 20 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களுள் ஆறு பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், பங்களாதேசத்தில் ஐவர், இந்தியாவில் மூன்று பேர் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி உக்ரெய்ன் போரில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் நான்கு பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.