கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு கேப் வெர்டே அணி முதல் முறையாக தகுதி

கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு கேப் வெர்டே அணி முதல் முறையாக தகுதி

2026ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு கேப் வெர்டே அணி முதல் முறையாக தகுதிப் பெற்றுள்ளது.

இதன் மூலம் உலகக் கிண்ண கால்​பந்து தொடருக்கு முன்​னேறிய மிகக்​குறைந்த அளவி​லான மக்​கள்​தொகை கொண்ட நாடு​கள் பட்​டியலில் இரண்டாவது இடத்தை கேப் வெர்​டே பிடித்துள்ளது.

இந்த நாட்டில் 5.93 லட்சம் மக்களே வசித்து வருகின்றனர்.

2026ஆம் ஆண்டு பிபா உலகக் கிண்ண கால்​பந்து  தொடரை அமெரிக்​கா, கனடா, மெக்​சிகோ ஆகிய நாடு​கள் இணைந்து நடத்​தவுள்​ளன.

இத்தொடரில் பங்​கேற்​கும் அணி​கள் தகு​திச் சுற்​றுப் போட்​டிகள் மூலம் தேர்வு செய்​யப்​படுகின்றன.

இந்​நிலை​யில் ஆப்​பிரிக்க மண்டல பிரி​வில் தகு​திச் சுற்​றுப் போட்​டிகள் நடை​பெற்​றன. இதில் கேப் வெர்டே அணி​யும், எஸ்​வாட்​டினி அணி​யும் மோதிக்கொண்டன.

இந்தப் போட்டியின் கேப் வெர்டே அணி மூன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் எஸ்​வாட்​டினி அணியை வீழ்த்தி உலகக் கிண்ண தொடருக்கு தகுதிப் பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், உலகக் கிண்ண கால்​பந்து தொடருக்கு தகுதி பெற்று மிகக்​குறைந்த அளவி​லான மக்​கள்​தொகை கொண்ட நாடு என்ற பெரு​மை ஐஸ்​லாந்து வசமுள்ளது.

2018ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அந்த அணி பங்கேற்றப் போது அந்நாட்டின் மக்கள் தொகை நான்கு லடத்திற்கும் குறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This