இந்திய  பிரதமரின் புகைப்படங்களை AI  மூலம் மோசமாகச் சித்தரித்தவர் கைது

இந்திய பிரதமரின் புகைப்படங்களை AI மூலம் மோசமாகச் சித்தரித்தவர் கைது

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்களை AI மூலம் மோசமாகச் சித்தரித்து வெளியிட்ட நபரை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர் .

பிகார் மாநிலத்தின் அர்வால் நகரைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடியின் புகைப்படங்களை மிக மோசமாகச் சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் . இதனைத் தொடர்ந்து, சிந்தாந்த் குமார் என்கிற அந்த நபரை பிகாரின் மௌலானாசக் என்ற கிராமத்தில் வைத்து டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர் .

கைதான நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் டெல்லி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், அந்த நபர் தொடர்ந்து பிரதமர் மோடியின் புகைப்படங்களை AI மூலம் மோசமாக சித்தரித்து வெளியிட்டதும், அவற்றைப் பல்வேற்று சமூக வலைதளக் கணக்குகளில் பதிவிட்டதும் தெரிய வந்துள்ளது .

அவரின் பதிவுகள் மக்களைத் தவறாக வழிநடத்தி பொது அமைதியைக் குலைக்கும் என்பதால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இதேநேரம் பாஜக பெண் தலைவர்கள் பலருடைய படங்களையும் Morphing செய்ததாகவும் அந்த நபர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் மீது போலி ஆவணங்களைத் தயாரித்தல், அவதூறு, குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )