அதிவேக நெடுஞ்சாலைகளில் 134 மில்லியன் வருமானம் – 3 நாட்களில் பெறப்பட்டதாக தகவல்

அதிவேக நெடுஞ்சாலைகளில் 134 மில்லியன் வருமானம் – 3 நாட்களில் பெறப்பட்டதாக தகவல்

இந்த மாதம் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கொழும்பு உள்ளிட்ட அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகளவு வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மூன்று நாட்களில் 134 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது கடந்த ஆண்டைவிட கூடுதலான வருமானம் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சித்திரை வருடப் பிறப்பு என்பதால் இந்த நாட்களில் அதிகளவு வருமானம் பெறப்பட்டது என்றும், இந்த மூன்று நாட்களிலும 387,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This