service Archives - Oruvan.com

‘சாகரிக்கா’ ரயில் சேவை வழமைக்கு
தடம் புரண்ட ‘சாகரிக்கா’ ரயில் இன்று (27) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 ஆம் திகதி பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிக்கா ரயில் வாதுவை ரயில் நிலையத்தில் தடம் புரண்டதுடன், அதில் ரயிலின் 13 பெட்டிகளில் 11 பெட்டிகள் தடம் புரண்டிருந்தன.

மேலும், தடம் புரண்ட சாகரிக்கா ரயிலில் கடமையாற்றிய நான்கு ஊழியர்கள் ரயில் சேவைக் கடமைகளில்

இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தசம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களை ரயில் சேவைக் கடமைகளில் ஈடுபடுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குறித்த ரயிலின் சாரதி, காப்பாளர் , உதவி சாரதி மற்றும் உதவி காப்பாளர் ஆகியோரை இவ்வாறு ரயில் சேவைக் கடமைகளில் ஈடுபடுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரயில்வே நிர்வாகத்தின் குறைபாடுகளை மூடிமறைப்பதற்காகவே விபத்துக்குள்ளான ‘சாகரிக்கா’ ரயிலின் சாரதி, காப்பாளர், உதவி சாரதி மற்றும் உதவி காப்பாளர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சுயாதீன தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ள ரயில்களை இயக்குவதிலிருந்து விலகவும், வேகக் கட்டுப்பாடுகளுக்கு அமைய ரயில்களை இயக்கவும் ரயில் சாரதிகள் சங்கம் தற்போது தீர்மானித்துள்ளதாக அதன் அமைப்பாளர் இந்திக தொடம்கொட சுட்டிக்காட்டுகின்றார்.

The post ‘சாகரிக்கா’ ரயில் சேவை வழமைக்கு appeared first on Oruvan.com.

119 தொலைபேசி சேவையில் தாமதம் – சுவ செரிய சேவையுடன் ஒப்பிட்டு ஹர்ஷ விசனம்
இலங்கை பொலிஸாரின் அவசரகால தொலைபேசி சேவை முறையை, சுவ செரிய இலவச ஆம்புலன்ஸ் சேவையுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார்.

அவர் தனது ‘X’ தளத்திலேயே இவ்வாறு விமர்சித்துள்ளார்.

பொலிஸார் கையாள்வதாகக் கூறும் 4,500 அழைப்புகளை விட அதிகமாக, சுவ செரி ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாளைக்கு சுமார் 5,000 அழைப்புகளைக் கையாண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் 98.9% வீதமான அழைப்புகளுக்கு, முதல் அழைப்பிலேயே பதிலளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொலிஸாரின் 180 நிமிட தாமதத்துடன் ஒப்பிடுகையில், நாடளாவிய ரீதியில் சுவ செரியவின் சராசரி பதிலளிக்கும் நேரம் 13 நிமிடங்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுவ செரியவின் செயல்திறனுக்கு டிஜிட்டல் அமைப்புகள், கடுமையான நெறிமுறைகள் மற்றும் அதன் ஊழியர்களின் அணுகுமுறையே காரணம் என ஹர்ஷா டி சில்வா பாராட்டினார்.

119 அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில் ஏற்படும் தாமதங்கள் குறித்துத் தனக்குத் தினமும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் ஒப்புக்கொண்டதற்குப் பதிலளிக்கும் வகையில் அவரது கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

The post 119 தொலைபேசி சேவையில் தாமதம் – சுவ செரிய சேவையுடன் ஒப்பிட்டு ஹர்ஷ விசனம் appeared first on Oruvan.com.

பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் 5% அதிகரிப்பு
பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை 5% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்க செயலாளர் லலித் சந்திரசிறி இன்று ஊடகங்களுக்கு கருத்து

தெரிவிக்கும் இதனை அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டிருந்தாலும், போக்குவரத்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

இதன்படி, இன்று முதல் குறித்த கட்டண திருத்தம் அமலுக்கு வரும் என்று அவர் கூறினார்.

The post பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் 5% அதிகரிப்பு appeared first on Oruvan.com.

ஆசிரியர் சேவைத் தேர்வு – பட்டப்படிப்பு தகுதிக்கான காலவகாசம் திருத்தம்
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டித் தேர்வுக்கு முன்நிபந்தனையான பட்டப்படிப்புத் தகுதியை நிறைவு செய்வதற்கான காலவகாசம் திருத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை

பட்டப்படிப்பை நிறைவு செய்த 40 வயதுக்குட்பட்ட நபர்கள் தற்போது தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

இது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னர் வெளியான வர்த்தமானியின் கீழ், 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம்

30 ஆம் திகதி வரை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் பொது சேவையில் பணியாற்றி, முறையான அனுமதியுடன்

ராஜினாமா செய்த நபர்களும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதிக்கு முன் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தால்

விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என புதிய வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஆசிரியர் சேவைத் தேர்வு –  பட்டப்படிப்பு தகுதிக்கான காலவகாசம் திருத்தம் appeared first on Oruvan.com.

வாரத்தில் 07 நாட்களும், காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை
காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் 07 நாட்களிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதி முதல் இந்த மாதம் 28ஆம் திகதி வரை நாளாந்தம் கப்பல் சேவை இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன்

தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் செவ்வாய்க் கிழமை தவிர்ந்த வாரத்தின் ஏனைய ஆறு நாட்களும் குறித்த கப்பல் சேவை இடம்பெற்றுவந்தது.

The post வாரத்தில் 07 நாட்களும், காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை appeared first on Oruvan.com.

மின்சார சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு
மின்விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 02 ஆம் இலக்க சரத்திற்கமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையை நடாத்தி செல்வதற்கு குறித்த சேவைகள் அத்தியவசியமானவை என்பதையும் இடையூறு அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் போன்ற விடயங்களை கருத்திற் கொண்டு இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

The post மின்சார சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு appeared first on Oruvan.com.

பல ஆண்டுகளுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மீண்டும் சேவையில்
பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக (CHOGM) இறக்குமதி செய்யப்பட்ட 35 பேருந்துகளில் ஒன்பது பேருந்துகள், இன்று செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.

இதற்கமைய 375 இலட்சம் ரூபா செலவில் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று கட்டுபெத்த சூப்பர் சொகுசு சுற்றுலா சாலையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு, அவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும், உதிரி பாகங்கள் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவை மீண்டும் சேவையில் சேர்க்கப்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

காலி, மாத்தறை மற்றும் கண்டி போன்ற இடங்களுக்கு நீண்ட தூர சேவைகளுக்கு அதிக தேவை உள்ள நிலையில் இந்த பேருந்துகள் ஆரம்பத்தில் குறுகிய தூர சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும், பின்னர் நீண்ட தூர வழித்தடங்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

The post பல ஆண்டுகளுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மீண்டும் சேவையில் appeared first on Oruvan.com.

பிரதான மாரக்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்
பிரதான மாரக்கம் மற்றும் கரையோர மார்க்கத்திலான ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலே தடம் புரண்டுள்ளது.

The post பிரதான மாரக்கத்திலான ரயில் சேவைகள் தாமதம் appeared first on Oruvan.com.

கொழும்பில் இன்று முதல் மீண்டும் 155 இலக்க பஸ் சேவை
கொழும்பில் இன்று முதல் 155 இலக்க பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் செல்லும் 155 ஆம் இலக்க பஸ் சேவை, சில வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.

குறித்த பகுதியில் வாழும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகக்குகமைய மாநகர சபை அமர்வுகள் மற்றும் பிற அபிவிருத்தி கூட்டங்களில் தொடர்ச்சியாக இந்த பஸ் சேவையின் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இதன் விளைவாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் கீழ் இன்று காலை 5.30 முதல் 155 பஸ் சேவை மட்டக்குளி தொடக்கம் நகர மண்டபம் வரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது.

The post கொழும்பில் இன்று முதல் மீண்டும் 155 இலக்க பஸ் சேவை appeared first on Oruvan.com.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – நிலந்த ஜயவர்தன சேவையிலிருந்து நீக்கம்
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்தன உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நிலந்த ஜயவர்தன அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக செயற்பட்டிருந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளடக்கிய சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணையில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையால் நிலந்த ஜயவர்தன சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

The post உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – நிலந்த ஜயவர்தன சேவையிலிருந்து நீக்கம் appeared first on Oruvan.com.