Minister Archives - Oruvan.com

எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு தேடி ரஷ்யா செல்லும் அமைச்சர் விஜித
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்குத் தேவையான எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வது குறித்து மாஸ்கோவில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை அவர் முன்னெடுக்கவுள்ளார்.

கடந்த வாரம் ரஷ்யாவின் பிரதி வெளியுறவு மற்றும் எரிசக்தி அமைச்சர்கள் கொழும்புக்கு வருகை தந்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய நிலையில் இந்த விஜயம் அமையவுள்ளது.

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்கா அண்மையில் தளர்த்தியுள்ள சூழலில், அமைச்சரின் இந்தப் பயணம் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

The post எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு தேடி ரஷ்யா செல்லும் அமைச்சர் விஜித appeared first on Oruvan.com.

போதைப்பொருள் பிரச்சினைக்கான தீர்வு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் – பிரதமர்
நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டிய அதேவேளை, அந்தச் செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் அடிமட்ட அளவில் பெறுபேறுகள் எட்டப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையான தேசிய மூலோபாயத் திட்டம் (SUD) குறித்த தெளிவுபடுத்தல் நிகழ்வுகள் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டுள்ளோர் எதிர்நோக்கும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார சவால்களுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக முன்மொழியப்பட்டுள்ள தேசிய மூலோபாயம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை முகாமைத்துவம் செய்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல் ஆகியவற்றுக்காக இந்த தேசிய மூலோபாயத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

சான்றுகள் அடிப்படையிலான தேசிய அணுகுமுறையின் ஊடாகத் தடுப்பு, சிகிச்சை, புனர்வாழ்வு மற்றும் சமூகத்துடன் மீண்டும் இணைத்தல் ஆகிய சேவைகளைப் பலப்படுத்துவதே இந்த மூலோபாயத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கிய பங்குதாரர்களின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

The post போதைப்பொருள் பிரச்சினைக்கான தீர்வு  தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் – பிரதமர் appeared first on Oruvan.com.

பிலிப்பைன்ஸை சென்றடைந்த பிரதமர்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) அழைப்புக்கமைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அவர் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த நிகழ்வுகளில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிலாவில் உள்ள நினோய் அகினோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரை, பிலிப்பைன்ஸுக்கான இலங்கை தூதுவர் டாக்டர் சானக தல்பஹேவா (Chanaka Talpahewa), பிலிப்பைன்ஸ் அரச அதிகாரிகள் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.

இந்த விஜயத்தின் போது, ​​மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் பிரதமர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

மகளிர் தின கொண்டாட்டத்துடன் இணைந்து, பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் பல அமைச்சர்களுடன் பிரதமர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

The post பிலிப்பைன்ஸை சென்றடைந்த பிரதமர் appeared first on Oruvan.com.

பிரித்தானிய துணைப் பிரதமர் நாட்டை வந்தடைந்தார்
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மி (David Lammy) மற்றும் அவரது  அலுவலகத்தைச் சேர்ந்த 07 மூத்த அதிகாரிகள் கொண்ட குழு இன்று  காலை நாட்டை வந்தடைந்தது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன மற்றும் சிலர் அவர்களை வரவேற்றனர்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் என்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை்கு பிரித்தானியா பல்வேறு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ள நிலையில்

பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பார்வையிட்டு குழந்தைகள் பாதுகாப்புக்கான உலகளாவிய வணிக ஒப்பந்ததிலும் அவர் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் இன்று இதற்கான விழா (17) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரித்தானிய துணைப் பிரதமர் நாட்டை வந்தடைந்தார் appeared first on Oruvan.com.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்திய பயணம் மீண்டும் இரத்து
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்குப் பிறகு, பாதுகாப்பு கவலை காரணமாக பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெதன்யாகு கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியா சென்றிருந்தார். பாதுகாப்பு மதிப்பீடு நிலுவையில் உள்ள நிலையில் அடுத்த வருட தொடக்கத்தில் வரும் வகையில் புதிய திகதியை கோருவார் என கூறப்படுகிறது.

நெதன்யாகு இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்வது இது 3 ஆவது முறையாகும்.

கடந்த செப்டம்பர் 09 ஆம் திகதி இந்தியா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் செப்டம்பர் 17 ஆம் திகதி மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டதால் இந்திய பயணத்தை ரத்து செய்தார்.

அதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதமும் தேர்தல் காரணமாக இந்திய பயணத்தை ரத்து செய்திருந்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார். இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்திய பயணம் மீண்டும் இரத்து appeared first on Oruvan.com.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (10) காலை முன்னிலையாகியுள்ளனர்.

நிதிமோசடி சட்டத்தின் கீழ் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர்கள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

The post முன்னாள் அமைச்சர் கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை appeared first on Oruvan.com.

பிரான்ஸ் பிரதமர் திடீர் பதவி விலகல்
பிரான்சின் புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு திங்கள்கிழமை (ஒக்டோபர் 6) தனது புதிய அமைச்சரவையை நியமித்த 14 மணி நேரத்திற்குப் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பதவியேற்ற 27 நாட்களில் அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அவரது இராஜினாமா எதிர்பாராத ஒன்று எனவும், பிரான்சின் அரசியல் நெருக்கடியின் மற்றொரு பெரிய ஆழத்தை தோற்றுவித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தீவிர வலதுசாரி தேசிய பேரணி உடனடியாக? நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்குமாறு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை வலியுறுத்தியுள்ளது.

பல வாரங்களாக பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், மக்ரோனின் நெருங்கிய கூட்டாளியான லெகோர்னு நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சர்களை நியமித்தார்.

அத்துடன், அமைச்சர்கள் இன்று திங்கள் கிழமை பிற்பகல் முதல் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் புதிய அமைச்சரவை பலருக்கும் கோபத்தை தூண்டியது.

பிரான்ஸ் ஏற்கனவே அரசியல் நெருக்கடியில் மூழ்கியுள்ள நேரத்தில், நாடாளுமன்றத்தில் எந்தக் குழுவிற்கும் பெரும்பான்மை இல்லாத நேரத்தில், அமைச்சரவை எவ்வளவு காலம் நீடிக்க முடியும் என்ற கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையிலேயே, இன்று திங்கட்கிழமை காலை லெகோர்னு தனது இராஜினாமாவை ஜனாதிபதி மக்ரோனிடம் ஒப்படைத்தார். ஜனாதிபதி அதை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு மக்ரோன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, எந்தவொரு கட்சியோ அல்லது குழுவோ நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறாததால், பிரான்ஸ் அரசியல் பெருகிய முறையில் நிலையற்றதாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு முன்கூட்டிய நாடாளுமன்றத் தேர்தலை நடத்த மக்ரோன் எடுத்த முடிவு, நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த மாதம்தான் நியமிக்கப்பட்ட லெகோர்னு, இரண்டு ஆண்டுகளில் மக்ரோனின் ஐந்தாவது பிரதமர் ஆவார்.

“தேர்தல்களுக்குத் திரும்பாமல், தேசிய சட்டமன்றம் கலைக்கப்படாமல், ஸ்திரத்தன்மைக்குத் திரும்ப முடியாது” என்று லெகோர்னு இராஜினாமா செய்த பின்னர் தேசிய பேரணித் தலைவர் ஜோர்டான் பார்டெல்லா தெரிவித்துள்ளார்.

லெகோர்னு ராஜினாமா செய்ததால் பாரிஸின் CAC 40 1.5 சதவீதம் சரிந்தது, இது ஐரோப்பாவில் மிக மோசமாக செயல்படும் குறியீடாக மாறியது.

வங்கிப் பங்குகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதால், BNP பரிபாஸ், சொசைட்டி ஜெனரல் மற்றும் கிரெடிட் அக்ரிகோல் ஆகியவை நான்கு சதவீதம் முதல் ஐந்து சதவீதம் வரை சரிந்தன.

The post பிரான்ஸ் பிரதமர் திடீர் பதவி விலகல் appeared first on Oruvan.com.

காற்றாலை அமைப்பதற்கு திறப்புவிழா நடத்தியவர்களே அதனை எதிர்க்கின்றனர் – சந்திரசேகர்
மன்னார் காற்றாலைக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னால் முன்னாள் அரசியல்வாதிகள் உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – சங்கானையில் வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் நிகழ்வு ஒன்றில் இன்றையதினம் (03) கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மன்னார் காற்றாலை அமைப்பதற்கு திறப்புவிழா நடத்தியவர்கள், காற்றாலைகளுக்கு பின்னால் ஓடியவர்கள், அந்த காற்றாலை கம்பனிகளுகளிடம் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டவர்கள் முன்னைய அரசியல்வாதிகள்.

அந்த அரசியல்வாதிகள் தான் இப்போது இந்த போராட்டத்தின் பின்னால் இருக்கின்றனர்.

இது மக்களது பிரச்சினையாக இருக்குமாக இருந்தால், இது மன்னாருடைய பிரச்சினையாக இருக்குமாக இருந்தால், இந்த பிரச்சினையால் மன்னார் மூழ்குமாக இருந்தால் அது பற்றி வேதனை அடைபவர்கள், அதனை தடுத்து நிறுத்துபவர்கள் வேறு யாருமல்ல நாங்கள் தான்.

அதனால் இந்த காற்றாலை சம்பந்தமான பிரச்சினைக்கு மக்களுடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக் கொடுப்போம்” என்றார்.

The post காற்றாலை அமைப்பதற்கு திறப்புவிழா நடத்தியவர்களே அதனை எதிர்க்கின்றனர் – சந்திரசேகர் appeared first on Oruvan.com.

காற்றாலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்களே இன்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் – அமைச்சர் சந்திரசேகர்
கடந்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையத்தை அமைத்து கோபுரங்களை திறந்து வைத்தவர்களே இன்று அதற்கு எதிராக போராடுகிறார்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்(28) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் மாவட்டத்தில் காற்றாலை பிரச்சினை தற்போது பூதாகரமாக உருவாகியுள்ளது.

மன்னாருக்கு காற்றாலை இயந்திரங்களுக்கான உபகரணங்களைக் கொண்டு வருகின்ற பொழுது அங்கு இருக்கின்ற மக்கள் போராடியதாகவும், போராட்டக்காரர்களைப் பொலிசார் அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. பெரிய அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சினை என்பது ஜனாதிபதி மற்றும் அதற்குரிய அமைச்சர் அனைவரோடும் கலந்துரையாடப்பட்டபோது எடுக்கப்பட்ட முடிவுகளின் படி தற்போது அமைக்க இருக்கின்ற 14 காற்றாலை கோபுரங்களும் குழிகள் தோண்டப்பட்டு இருக்கின்றன.

அதற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் மாத்திரமே மிச்சமிருக்கிறது.

அந்தப் பணிகளை செய்து முடிப்பதற்கான சந்தர்ப்பத்தை தருமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இன்றைக்கு இதனை பூதாகரமான போராட்டமாக கிளப்புவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தி வருகிறார்கள் யார் என்று பார்த்தால், முன்னர் அந்த மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையத்தை அமைத்து கோபுரங்களை சென்று திறந்து வைத்தவர்கள்,அதற்குப் பின்னால் நின்று வக்காலத்து வாங்கியவர்கள்,

இதை நான் சொல்லவில்லை. சமூக வலைத்தளங்கள் நேரடியாக இதனை அம்பலமாக்கி கொண்டு இருக்கிறது. இந்தப் போராட்டம் என்பது யாருக்காக? எதற்காக மன்னாரை மீட்பதற்காகவா? மன்னாரை மீட்பதில் எங்களை விட அக்கறை கொள்வதற்கு வேறு யாரும் இல்லை.

மன்னாருக்கு அதிகளவான பாதிப்பு ஏற்படுவது கனிய மண் அகழ்வின் மூலமே தான். அந்த ஆபத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். காற்றாலை மின் நிலையம் அமைப்பது என்பது அது செய்து முடித்த வேலை. அதனால் மக்களிடம் நாம் ஒன்றை கேட்கின்றோம்.

உலகம் முழுவதும் தேடி பார்க்கின்றபோது இலங்கையில் இதற்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை கோபுரங்களைச் சென்று கோபுரங்களை சென்று பாருங்கள். அந்த பிரதேசங்களை சென்று பாருங்கள்.

அந்தப் பிரதேசத்தில் மீன்கள் வரவில்லையா? உயிரினங்கள் வரவில்லையா? பறவைகள் வரவில்லையா? இயற்கைக்கு மாசு ஏதும் ஏற்பட்டிருக்கிறதா என்பதை பாருங்கள். அவ்வாறு மாசு ஏற்பட்டிருக்குமாக இருந்தால் தாக்கம் ஏற்பட்டிருக்குமாக இருந்தால் அது விஞ்ஞான ரீதியாகவும் தர்க்கரீதியாக நிரூபிக்கப்படுமாக இருந்தால் நாங்களும் உங்களோடு சேர்ந்து போராடுவதற்கு தயார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post காற்றாலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்களே இன்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் – அமைச்சர் சந்திரசேகர் appeared first on Oruvan.com.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐ.நா குழுவால் முதலாவது மதிப்பாய்வு – நீதியமைச்சர் ஜெனீவாவுக்கு விஜயம்
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (24) சுவிட்ஸர்லாந்தின் , ஜெனீவாவுக்கு விஜயம்

மேற்கொள்கிறார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதலாவது மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக அவர் ஜெனீவாவுக்கு செல்கிறார்.

இந்த மீளாய்வுக் கூட்டம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

The post வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐ.நா குழுவால் முதலாவது மதிப்பாய்வு – நீதியமைச்சர் ஜெனீவாவுக்கு விஜயம் appeared first on Oruvan.com.