Easter Archives - Oruvan.com

ஈஸ்டர் தாக்குதல் – நீதிக்கான போராட்டம் ஓயாது என கொழும்பு பேராயர் கருத்து
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில்

முன்னேற்றம் காணப்படுவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்கள் இடம்பெற்று ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற விசேட திருப்பலியில் உரையாற்றிய போதே அவர்

இதனைக் கூறியுள்ளார்.

சில தரப்பினர் விசாரணைகளுக்குத் தடை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

தாக்குதல்கள் தொடர்பாகத் தங்கள் கடமைகளை ஆற்றத் தவறிய ஜனாதிபதிகள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும்

பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தபோதிலும்,

சட்டமா அதிபரும் அவரது திணைக்களமும் நடவடிக்கை எடுப்பதை தாமதப்படுத்துவதாக அவர் கவலை வெளியிட்டார்.

தாக்குதல்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய நபர்களை, அவர்களின் தகுதியைப் பொருட்படுத்தாமல்,

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரிப்பது அவசியம் என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் கூறினார்.

“ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியைக் கண்டுபிடிப்பது, நீதியை உறுதி செய்வதும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்

அவர்களது குடும்பத்தினரின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவதும் ஆகும்,” என்று அவர் கூறினார்.

2024 ஆம் ஆண்டு ஒக்டோபரில் கட்டுவபிட்டிய தேவாலயத்தில், காலப்போக்கில் உண்மை மங்கிவிட அரசாங்கம் அனுமதிக்காது

என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு பேராயர் கேட்டுக்கொண்டார்.

2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணர, ஒரு விரிவான, உண்மை அடிப்படையிலான

விசாரணையை நடத்துமாறு அவர் ஜனாதிபதியை வலியுறுத்தினார்.

மேலும், தற்போதைய முயற்சிகள் தொடரும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

உண்மை வெளிப்படும் வரை நீதிக்கான தங்களின் போராட்டம் ஓயாது என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் வலியுறுத்தினார்.

The post ஈஸ்டர் தாக்குதல் – நீதிக்கான போராட்டம் ஓயாது என கொழும்பு பேராயர் கருத்து appeared first on Oruvan.com.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவுத் திருப்பலி – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் உலகம் முழுவதும் உயிர்த்த ஞாயிறு பெருவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதனை முன்னிட்டு, நேற்று (04) சனிக்கிழமை இரவு நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் விசேட நள்ளிரவுத் திருப்பலிகள் இடம்பெற்றன.

மன்னார் மாவட்டத்திலும் பல்வேறு ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெற்றதுடன், தேவாலயங்களைச் சூழப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி நேற்று இரவு 11.15 க்கு ஆரம்பமானது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இத்திருவிழாத் திருப்பலி கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் பக்திப்பரவசத்துடன் கலந்துகொண்ட இத்திருப்பலியின் போது, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு ஆலயத்தைச் சூழ பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவுத் திருப்பலி – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Oruvan.com.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு
நாடு முழுவதும் இன்று கிறிஸ்தவர்களால் உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய விசேட அறிவுறுத்தல்களுக்கமைய, பொலிஸார் மற்றும்

இராணுவத்தினர் தேவாலயங்களைச் சூழப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபரினால் விசேட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மக்கள் அதிகளவில் கூடும் தேவாலயங்களில் மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நாடு தழுவிய ரீதியில்

தேவாலயங்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் உள்ள முக்கிய தேவாலயங்களில் ஆயுதம் ஏந்திய பொலிஸாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு,

பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

The post உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு appeared first on Oruvan.com.

ஈஸ்டர் தாக்குதல் – பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 நாட்டுக்கு வெளிப்படுத்துவோம்
அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரியை மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கடந்த 07 வருடங்களாக வியாபாரம் செய்யப்பட்டது. இதனைக்கொண்டு அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன, அரசாங்கங்கள் கலைக்கப்பட்டன.

எந்தவொரு அடிப்படையும் இன்றி இராணுவத்தினரை துன்புறுத்த இந்தத் தாக்குதல் பயன்படுத்தப்பட்டது. இப்போது இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் வந்துவிட்டது.

அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரியை நாம் வெளிக்கொணருவோம்.

சுமார் ஒன்றரை வருட காலம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் “உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி” எனும் ஆய்வு நூலை தயாரித்துள்ளோம். ஆகவே அதனை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி மாலை 3:30 க்கு வெளியிட எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

The post ஈஸ்டர் தாக்குதல் – பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 நாட்டுக்கு வெளிப்படுத்துவோம் appeared first on Oruvan.com.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – 12 பேர் விடுவிப்பு
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 02 ஆண் சந்தேக நபர்களையும், 10 பெண் சந்தேக நபர்களையும் வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டது.

சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அவர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறைவு செய்து,  பிரதம நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

பிரதம நீதவானிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் படி, இந்த முறைப்பாட்டை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்து, இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களிடம் இருந்து பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகள் உள்ளிட்ட வழக்கு பொருட்களை மீண்டும் அவர்களுக்கு வழங்க உத்தரவிடுமாறு கோரினார்.

அதன்படி, அவர்களது பொருட்களை சந்தேக நபர்களுக்கு விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

The post உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – 12 பேர் விடுவிப்பு appeared first on Oruvan.com.

ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய குழு நியமனம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக நால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் இந்த குழு செயற்படுவதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி. புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள உறுப்பினர்களில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு துறையின் பணிப்பாளர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்திருப்பதாவது,

“பிரதான குழுவின் கீழ் மேலும் பல துணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன, அவை ஏற்கனவே அறிக்கையை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன.

66,000 பக்கங்களுக்கு மேல் கொண்ட அறிக்கையின் தற்போதைய பரிசோதனையின் போது கண்டறியப்பட்ட புதிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்”

என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்(CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உத்தரவிற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க அறிக்கையை ஒப்படைத்தார்.

அறிக்கை சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அமைச்சர் விஜேபால உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஈஸ்டர் தாக்குதல் –  ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய குழு நியமனம் appeared first on Oruvan.com.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதில்களுக்காகக் காத்திருப்பதாகவும், இடம்பெற்று வரும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய செயன்முறையை நிலைநிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சஹரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம், அதேபோன்று ஷங்ரி-லா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.

தெமட்டகொடை மற்றும் தெஹிவளையில் மேலும் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தாக்குதல்களால் 273 பேர் உயிரிழந்ததுடன் 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்(CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உத்தரவிற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க அறிக்கையை ஒப்படைத்தார்.

அறிக்கை சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அமைச்சர் விஜேபால உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல் appeared first on Oruvan.com.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறது அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு
அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதலின் துயரத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைக்கு மத்தியில் உணர்ச்சிப்பூர்வமான பதில்களைத் தூண்டவும், பொது மக்களின் உணர்வுகளைக் கையாளவும் அரசாங்கம் உயிரித்த ஞாயிறு தாக்குதலை கருவியாகப் பயன்படுத்துகிறது.

நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அப்போதைய ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்திடம் உத்தியோகப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

அந்த அறிக்கையினை நாடாளுமன்றத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தின் ஊடாக பொது மக்கள் பார்வையிட முடியும். ஏற்கனவே குறித்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் சட்டமா அதிபரிடம் உள்ளன.

இந்த விடயம் தொடர்பில் சட்டரீதியான குற்றவியல் விசாரணைகள் பாரபட்சமற்ற வகையில் நடத்தப்பட வேண்டும். முதலில் ஒரு இலக்கை அடையாளம் கண்டு, பின்னர் முன்கூட்டிய குற்றச்சாட்டை ஆதரிப்பதற்கான ஆதாரங்களைத் தேடுவது விசாரணை அல்ல.

குறித்த நடவடிக்கையானது தனிநபர்களை, குறிப்பாக மாறுபட்ட அரசியல் கருத்துகளைக் கொண்டவர்களைத் துன்புறுத்துவதை நோக்கமாகக் கொண்ட  திட்டமிடலாகும்.

தார்மீக மேன்மையை வெளிப்படுத்தும் செயற்றினுடன் செயல்படும் இந்த அரசாங்கம், இந்த தேசியத் துயரத்தை அரசியல் ஆதாயத்திற்கானதொரு கருவியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என தாம் கடுமையாக வலியுறுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், இத்தகைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளை மிகவும் அவமதிப்பவையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறது அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் – விஜித
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள்  விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜா-எல பிரதேச சபைக்கென போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பட்டுவத்த பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளினால் சிலர் பதற்றமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் – விஜித appeared first on Oruvan.com.

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிக்கொணரப்படுவார்கள்
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தெய்யந்தர பகுதியில் தற்போது நடைபெற்று வரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகக் கூறப்படும் குழுவை அம்பலப்படுத்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தற்போது பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

The post ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிக்கொணரப்படுவார்கள் appeared first on Oruvan.com.