District Archives - Oruvan.com

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முதல் நீர்வெட்டு நேரம் குறைப்பு
கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை ( 05) முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் கால அளவைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்த மற்றும் பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அமுலில் உள்ள நீர்வெட்டு நேரம் நாளை முதல் தினசரி 08 முதல் 12 மணித்தியாலங்களால் குறைக்கப்படும் என சபை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை எந்தவொரு பிரதேசத்திலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

The post கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முதல் நீர்வெட்டு நேரம் குறைப்பு appeared first on Oruvan.com.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் – யாழ் மாவட்டத்தில் மூவர் கைது
கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கார் ஒன்றில் வருகை தந்த அடையாளந் தெரியாத நபர்களால் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற நபர் உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் – யாழ் மாவட்டத்தில் மூவர் கைது appeared first on Oruvan.com.

யாழ் மாவட்டத்தில் போதைப்பொளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொம்மைவெளி பகுதியில் நேற்றையதினம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து சுமார் 15 இற்கும் அதிகமான போதை மாத்திரைகளும் 50 மில்லிகிராம் ஹெரோயினும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 18,19 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post யாழ் மாவட்டத்தில் போதைப்பொளுடன் மூவர் கைது appeared first on Oruvan.com.

பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
சிறுபோக கொள்முதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை நெல் சந்தைப்படுத்தல் சபை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது.

அறுவடைப் பகுதியில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக கொள்முதல் செயல்முறை தாமதமானதாக சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

அறுவடை தற்போது நடைபெற்று வருவதால், பொலன்னறுவை முழுவதும் சுமார் 15 களஞ்சியசாலைகளில் நெல் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் சுமார் 300 நெல் களஞ்சியசாலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடப்பு பருவத்தில் நாடு முழுவதும் மொத்தம் 13 ஆயிரத்து 100 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

The post பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் appeared first on Oruvan.com.

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு
கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று திங்கட்கிழமை காலை 08.30 முதல் இரவு 08.30 வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா – எல , கட்டுநாயக்க, சீதுவை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர,

தொம்பே, கந்தானை, மினுவாங்கொடை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட

பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

The post கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு appeared first on Oruvan.com.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை
கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக

தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா – எல , கட்டுநாயக்க, சீதுவை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கந்தானை, மினுவாங்கொடை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

The post கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை appeared first on Oruvan.com.

களுத்துறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீடு
களுத்துறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தற்போதைய அரசாங்கம் அடுத்த சில மாதங்களில் ஒரு பில்லியன் ரூபாவை செலவிடும் என்றும், அதில் 200 மில்லியன் ரூபாவை மாவட்டத்தின் வீதி மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் “மறுமலர்ச்சி யுகத்தின் ஆரம்பம்” கிராமப்புற வீதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 21 மில்லியன் ரூபாய் செலவில் குடா வஸ்கடுவ சமகிபுர பிரதான வீதியில் இன்று காலை பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஆண்டு பரவலாக்கப்பட்ட நிதியிலிருந்து மாவட்டத்திற்கு செயற்படுத்த 12.6 பில்லியன் ரூபா மதிப்புள்ள 84 திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அந்த திட்டங்களை விரைவாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த நாட்டின் வரி செலுத்தும் மக்களால் கருவூலத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொரு வரிப் பணத்தையும் பொது சேவைக்கு திருப்பிவிடுவதே தனது அரசாங்கத்தின் ஒரே நம்பிக்கை என்றும் அவர் கூறினார்.

கருவூலத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் நலனுக்காக முறையாகவும், திட்டமிட்டபடியும், திறமையாகவும், ஊழல் இல்லாத வகையிலும் செலவிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில், அரசியல் அதிகாரம், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நாட்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், மக்களால் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் மக்களின் வளர்ச்சி கோரிக்கைகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

The post களுத்துறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீடு appeared first on Oruvan.com.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்
யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் இன்று வெள்ளிக்கிழமை (20) அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோவினால் அமைச்சரவை அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

பிரதீபன் 2024 ஆம் ஆண்டு மார்ச் 09 ஆம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

The post யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம் appeared first on Oruvan.com.

மாத்தளை மாவட்டத்தில் நூறிற்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிப்பு
மாத்தளை மாவட்டத்தில் உள்ள இரண்டு வைத்திய அதிகாரி பிரிவுகளில், அதிகளவான வயிற்றுப்போக்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குமுது பண்டார தெரிவித்தார்.

இதன்படி, நேற்று செவ்வாய்க்கிழமை காலை (25.03.25) நிலவரப்படி சுமார் 150 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“மாத்தளை மற்றும் உக்குவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கந்தேநுவர மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் வயிற்றுப்போக்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

மாத்தளை பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் வெளி சிகிச்சை நிலையங்களில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகம், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் நோய் பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கான மாதிரிகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அநுராதபுரம் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையுடன் கலந்துரையாடி வருகிறோம்.

நீரால் இந்நோய் பரவுகிறதா என ஆராய்ந்து வருவதுடன் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையும் நீர் மாதிரி பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நோயாளர்கள் தொடர்பில் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குடிநீரில் கவனம் செலுத்துமாறும், கொதிக்க வைத்த நீரையே குடிப்பதற்கு பயன்படுத்துமாறும் மக்களை அறிவுறுத்துகிறோம்” என்றார்.

The post மாத்தளை மாவட்டத்தில் நூறிற்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிப்பு appeared first on Oruvan.com.

கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு அமைச்சர் திடீர் கள விஜயம்
கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று  செவ்வாய்க்கிழமை (11.02.2025) திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

மேற்படி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.

திணைக்களம் ஊடாக மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் முறையாக இடம்பெறுகின்றனவா, சேவைகளை வழங்குவதில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வாறான வளங்கள் தேவை, மீனவர்களின் தரவுகள் என்பன பற்றி அமைச்சர் கேட்டறிந்தார்.

அத்துடன்,  இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும்போது கைப்பற்றப்பட்ட படகுகளின் நிலை பற்றியும் அமைச்சர் அவதானம் செலுத்தினார்.

அரசாங்கம் மூலம் மீனவர்களுக்கென வழங்கப்படும் நிவாரணங்களை எவ்வித தடையுமின்றி உரியவகையில் பெற்றுக்கொள்வதற்குரிய சூழ்நிலை உள்ளதா என்பது பற்றியும் அமைச்சர், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

The post கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு அமைச்சர்  திடீர் கள விஜயம் appeared first on Oruvan.com.