இஸ்ரேல் Archives - Oruvan.com

தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை
– Dharmaraja Rasmila

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பிராந்தியப் போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி வரும் தாக்கம் மிகப் பயங்கரமானது.

உலகளாவிய இந்த நெருக்கடி ஒருபுறமிருக்க, இலங்கையின் தற்போதைய நிலையைச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் 2022 ஆம் ஆண்டின் கசப்பான யதார்த்தங்களை மீண்டும் உற்றுநோக்க வேண்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றபோது 110 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு, அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது 370 ரூபாவைக் கடந்து சென்றமை நம் அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால், 2022 ஆம் ஆண்டில் இன்றைய நாளைப்போல உலகப் போர்களோ அல்லது சர்வதேசச் சந்தையில் பாரிய எரிபொருள் விலை அதிகரிப்போ இருந்திருக்கவில்லை. கொவிட் பெருந்தொற்றுப் பரவியது உண்மைதான் என்றாலும், அதனை உலகின் ஏனைய நாடுகள் அழுத்தங்களுக்கு மத்தியிலும் மிக அற்புதமாக மேலாண்மை செய்திருந்தன என்றே சொல்லவேண்டும்.

இந்த நிலையில், ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்ததை நாம் ஒப்புக்கொண்டேயாகவேண்டும். இருப்பினும், 2022 இல் ஏற்பட்ட அந்தப் பொருளாதார நெருக்கடிக் காலத்தில் ஒரு கிலோ பருப்பு 700 ரூபாவுக்கும் ஒரு கிலோ சீனி 500 ரூபாவுக்கும் விற்கப்பட்டதுடன், அவை தலா ஒன்று அல்லது இரண்டு கிலோ என்ற கட்டுப்பாடுகளுடனேயே மிகக் கடினமாகப் பெறப்பட்டன. உள்நாட்டு வெங்காயத்தில் இருந்து ஒரு கட்டுக் கீரை வரை அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் உச்சத்தைத் தொட்டன.

அத்துடன், வரலாறு காணாத வகையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக வாகன இறக்குமதி முற்றிலும் தடைப்பட்டிருந்தது.

இலங்கை வரலாற்றின் மிக மோசமான 70 சதவீதப் பணவீக்கம் அப்போதுதான் பதிவாகியது. இதற்கெல்லாம் சர்வதேசக் காரணிகள் எதுவும் இருக்கவில்லை. மாறாக, ஆட்சியாளர்களின் தவறான நிதி நிர்வாகமும் நிதி ஒழுக்கமின்மையுமே பிரதான காரணங்களாகும்.

திறந்த பொருளாதாரக் கொள்கைக்குள் நுழைந்து 48 ஆண்டுகள் கடந்த பின்னரும், இலங்கை இன்றுவரை வெறும் 6 முதல் 7 பில்லியன் டொலர் வரையிலான ஓர் ஏழ்மையான, சொற்பமான வெளிநாட்டுக் கையிருப்பைக் கொண்ட நாடாகவே நீடிக்கிறது.

அதிலும் கணிசமான பகுதி சீனாவினால் வழங்கப்பட்ட ‘சுவாப்’ (Swap) நிதியுதவியாகும். இதற்கு நேர்மாறாக, சீனாவிடம் 3 முதல் 4 ட்ரில்லியன் டொலர்களும், வியட்நாமிடம் 87 முதல் 90 பில்லியன் டொலர்களும் வெளிநாட்டுக் கையிருப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய உலகப் போர்ச் சூழலால் சர்வதேசச் சந்தையில் விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன.

யூரியா 151 சதவீதத்தாலும், டீசல் 148 சதவீதத்தாலும், பெட்ரோல் 136 சதவீதத்தாலும், உரம் 135 சதவீதத்தாலும், நிலக்கரி 112 சதவீதத்தாலும், அரிசி 107 சதவீதத்தாலும் விலை அதிகரிப்பைக் கண்டுள்ளன.

குறிப்பாக, உலகளாவிய உர வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரான், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகள் சூழ்ந்துள்ள ‘ஹோர்முஸ் நீரிணை’ வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது இப்பாதையில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளால், உரத் தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவு மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

போருக்கு முன்னர் 150 டொலராக இருந்த ஒரு தொன் சல்பூரிக் அமிலத்தின் விலை, தற்போது 1,000 டொலரை நெருங்கியுள்ளது.

உலகமே இத்தகைய பாரிய பொருளாதாரப் பேரழிவை எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான தருணத்தில், தியவன்ன நாடாளுமன்றத்தில் ஆட்சி பீடத்தில் உள்ள ஆளுங்கட்சியினர் சிலர் இன்னும் அலங்காரப் பொம்மைகளைப் போல எவ்விதப் பொறுப்பும் இன்றி நாடாளுமன்றில் கதிரைகளைச் சூடாக்கிவருகின்றனர்.

மறுபுறம் எதிர்க்கட்சியினரோ, ‘இன்று ஆட்சியைத் தாருங்கள், நாம் உடனே விலைவாசியைக் குறைப்போம்’ என்று எவ்விதத் தெளிவான பொருளாதாரத் திட்டமும் இன்றி ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தியவன்ன ஏரியில் இருக்கும் தவளைகளைப் போலப் பயனில்லாமல் சத்தமிடுவதைத் தவிர்த்து, உலக நிலைவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிராந்தியப் போர் முடியும் வரையிலாவது உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றி ஆராய்ந்து, பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வுகளைத்தேட ஒன்றிணைய வேண்டும், என்பதே இன்றைய காலத்தின் அவசியமான தேவையாகும்.

The post தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை appeared first on Oruvan.com.

உலகப் பொருளாதாரத்தின் அதிர்வுகளும் இலங்கையினது களநிலை யதார்த்தமும் வெறும் அரசியல் பேச்சுகள் தீர்வாகுமா?
“எண்ணெய் விலையைக் குறையுங்கள், வாகனங்களுக்கு வரி விதிக்காதீர்கள், மின்சாரக் கட்டணத்தைக் குறையுங்கள்! நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இதையெல்லாம் எப்போதோ குறைத்திருப்போம்” – தற்போதைய அரசியல் சூழலில் இலங்கையின் எதிர்க்கட்சியினரிடம் இருந்து தினமும் கேட்கக்கூடிய வழக்கமான மேடைப் பேச்சுகள் இவைதான்.

உண்மையாகவே எரிபொருள், மின்சாரம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்தால், இந்த நாட்டின் குடிமக்களாகிய நமக்கும் அது பெரும் மகிழ்ச்சிதான். வரிகள் குறைக்கப்பட்டால் அது சாதாரண அடித்தட்டு மக்களுக்குப் பாரியதொரு நிவாரணமாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதைப் பற்றி மீண்டும் நாம் புதிதாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை.

இந்த நாட்டின் குடிமக்களாகிய நமக்கும் அது புரிகிறது, நாமும் அதைத்தான் விரும்புகிறோம். ஆனால், இந்த நேரத்தில் நமது நாடு ஓர் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் தனித்து வாழும் தீவு அல்ல. நாமும் அந்த உலகளாவிய பொருளாதாரச் சங்கிலித் தொடரின் ஓர் அங்கமே. எனவே, சர்வதேச ரீதியாக ஏற்படும் அதிர்வுகள் நம்மை நேரடியாகப் பாதிக்கும் என்பதை நாம் இந்த யதார்த்தமான கோணத்தில்தான் பார்க்க வேண்டியுள்ளது. அதை விடுத்து வெற்று மேடைப் பேச்சுகளைப் பேசிக்கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

சர்வதேச அரசியல் அரங்கில் அமெரிக்காவும் ஈரானும் தற்போது ‘நெருப்பும் நீரும்’ போல மிகக் கடுமையான முரண்பாடுகளுடன் மோதிக்கொள்கின்றன.

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான பிராந்திய யுத்தம் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இந்த யுத்தம் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தி வரும் பொருளாதாரத் தாக்கம் நமக்கு மட்டுமல்ல, சுமார் 700 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கையிருப்பை மார்புதட்டி வைத்துள்ள இந்தியா போன்ற பிரமாண்டமான நாடுகளுக்கே இப்போது வலிக்கத் தொடங்கியிருக்கிறது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைவது நாம் அறிந்ததே. கடந்த மூன்று வருடங்களின் பின்னர், ஓர் அமெரிக்க டொலருக்கு 350 ரூபாவைச் செலுத்த வேண்டிய அவல நிலை கடந்த வாரம் நேர்ந்தது.

அதேநேரம், 700 பில்லியன் டொலர் கையிருப்பு வைத்துள்ள இந்தியாவின் நாணய மதிப்பும்கூட இந்த மே மாதத்தில் டொலருக்கு நிகராக 97 ரூபா வரை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நம்மிடம் இருப்பதோ வெறும் 7 அல்லது 7.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே. ஓர் எண்ணெய் கப்பலைக்கூட வரவழைப்பதற்கு நம்மிடம் 50 மில்லியன் டொலர் கையிருப்பு இல்லாமல், நாடே எரிபொருள் வரிசைகளில் நின்ற கசப்பான கடந்த கால வரலாறு நமக்கு மறந்துவிடக்கூடாது.

இலங்கை மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நாணய மதிப்புகள் அமெரிக்க டொலருக்கு நிகராக ஏன் வீழ்ச்சியடைகின்றன? உலகளாவிய மற்றும் உள்நாட்டு அழுத்தங்கள் இதற்கு எவ்வாறு காரணமாகின்றன??, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலாவதாக, இந்தியாவும் நம்மைப் போலத்தான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் ஒரு நாடு. இந்த வளைகுடா யுத்தம் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகி வருகிறது. இப்போதும், இந்த வினாடியிலும் அது நடந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாக, எண்ணெய்க்காகச் செலுத்த வேண்டிய டொலரின் அளவு இரு நாடுகளுக்கும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இரண்டாவதாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தற்போது வளர்ந்து வரும் சந்தைகளில் உள்ள தங்களது பங்குகளை விற்றுவிட்டு, அதிக லாபமும் பாதுகாப்பும் தரும் அமெரிக்கச் சொத்துகளில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். அப்படியென்றால் என்ன நடக்கும்? இந்தியாவிலிருந்து வெளியேறும் இந்த முதலீட்டாளர்கள் உள்நாட்டு ரூபாக்களை விற்றுவிட்டு டொலர்களை வாங்குவார்கள். அப்போது ரூபா இன்னும் பலவீனமடையும். அதாவது மூலதனம் முழுவதும் அமெரிக்கா நோக்கிப் பாய்வது நடக்கிறது.

மறுபுறம், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டுக்காண்டு அதிகரித்துச் செல்வது மற்றுமொரு ஆபத்தான அறிகுறியாகும். ஏற்றுமதி வருமானத்தை விட, இறக்குமதிச் செலவு அதிகரிப்பதே வர்த்தகப் பற்றாக்குறையாகும். கடந்த 2023 இல் 4.9 பில்லியன் டொலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, 2024 இல் 6.1 பில்லியன் டொலராக உயர்ந்தது.

கடந்த 2025 ஆம் ஆண்டில் ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதியும், வெளிநாட்டுப் பண அனுப்புதல்களும் சாதனை அளவில் அதிகரித்த போதிலும், வர்த்தகப் பற்றாக்குறை 7.9 பில்லியன் டொலராக மேலும் மோசமடைந்தது. இதற்கு 2025 இல் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமையும், நுகர்வுப் பொருட்களுக்கான தேவை எகிறியமையுமே காரணமாகும். ஏற்றுமதி வருமானம் உயர்ந்த போதிலும், நாம் கொண்டு வரும் பொருட்களுக்கான இறக்குமதிச் செலவு பல மடங்கு அதிகரித்தது.

தற்போது 2026 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில், இந்த யுத்தச் சூழலால் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளுடன் கப்பல் கட்டணங்களும், காப்புறுதிச் செலவுகளும் சர்வதேச அளவில் உயர்ந்துவிட்டன. இந்தத் தருணத்தில், ரூபா வீழ்ச்சியைத் தடுக்கவும் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும் நாம் எதைச் செய்தாலும் வெளிநாட்டுக் கையிருப்பை, அதாவது டொலரின் அளவை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும். இல்லையென்றால், எண்ணெய்க் கப்பல் ஒன்றைக்கூடக் கொண்டுவருவதற்கு 50 மில்லியன் டொலர் இல்லாமல் மக்கள் வரிசைகளில் நின்ற அதே பழைய நிலைமை மீண்டும் உருவாகிவிடும்.

எனவே, நாடாளுமன்றத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் வெறும் கூச்சல்களைப் போட்டுக் கொண்டிருக்காமல், உலக நிலைவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகப் பொருளாதார நெருக்கடிக்கு, குறைந்தது இந்த மத்திய கிழக்கு யுத்தம் முடியும் வரையிலாவது எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றிப் பேச வேண்டும். அதுவரை, குடிமக்களாகிய நாம் எரிபொருள் நுகர்வைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும்.

முடிந்தவரை பயணங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். நாம் பரிமாறிக்கொள்ளும் சோற்றுத் தட்டில் ஒரு சோற்றுப் பருக்கையையேனும் குப்பைத் தொட்டியில் போடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய ஓர் இக்கட்டான காலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

வர்த்தகப் பற்றாக்குறைத் தரவுப்பட்டியல்

2023 ஆம் ஆண்டு: 4.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

2024 ஆம் ஆண்டு: 6.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

2025 ஆம் ஆண்டு: 7.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் விளைவு)

குறிப்பு: 2026 ஆம் ஆண்டின் தற்போதைய உலகச் சூழலில், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாகக் கப்பல் மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை இலங்கையின் பொருளாதார மீட்சிக்குக் கூடுதல் சவாலாக மாறியுள்ளது.

– Dharmaraja Rasmila

The post உலகப் பொருளாதாரத்தின் அதிர்வுகளும்  இலங்கையினது களநிலை யதார்த்தமும்  வெறும் அரசியல் பேச்சுகள் தீர்வாகுமா? appeared first on Oruvan.com.

இஸ்ரேல், லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தம் மேலும் நீட்டிப்பு
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இரு நாட்டு அதிகாரிகளுடனும் அவர் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரப்பூர்வ தகவலை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கம் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த காலநீட்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.

The post இஸ்ரேல், லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தம் மேலும் நீட்டிப்பு appeared first on Oruvan.com.

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 250 பேர் பலி: ஐ.நா. கண்டனம்
லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களை ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அவர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், அங்கு நிலவும் சூழல் மிகவும் அபாயகரமானது என்று எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலின் குறித்த இராணுவ நடவடிக்கையானது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது எனவும் ஐ.நா. செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தாக்குதலை உடன் நிறுத்துமாறு அவர வலியுறுத்தியுள்ளார்.

லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய உக்கிர தாக்குதலில் 250 பேர்வரை பலியாகியுள்ளனர்.

The post இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 250 பேர் பலி: ஐ.நா. கண்டனம் appeared first on Oruvan.com.

மாபெரும் சீற்றத்தின் நிழல் – உலக பொருளாதாரத்தை அதிர வைத்த ஹார்முஸ் முட்டுக்கட்டை
“அதிர்ச்சி மற்றும் அச்சம்” உத்தி தோல்வி – ஈரான் ஒன்றுபட்டது, எதிர்பார்த்த அரசியல் வீழ்ச்சி ஏற்படவில்லை.

ஹார்முஸ் நீரிணை மூடல் – எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் உயர்வில் – உலக பொருளாதாரத்தில் அவசரநிலை.

‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ – அமெரிக்க நியாயம், அணு ஆயுத அச்சுறுத்தலையும் தாண்டி பரபரப்பான பிராந்திய சவாலை உருவாக்கியது.

உலகம் தற்போது ஈரான் போரால் உருவான மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. எரிசக்தி பாதைகள் முடக்கம், எண்ணெய் விலை உயர்வு, மற்றும் வல்லரசு போட்டி ஆகியவை உலக நிலைத்தன்மையை அச்சுறுத்துகின்றன. பாரம்பரிய சக்திகள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கை போன்ற அணிசேரா நாடுகள் மீண்டும் மத்தியஸ்த வினையூக்கியாக உருவெடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி உலக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் திருப்புமுனையாக பதிவாகியுள்ளது. அன்றைய தினம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட மாபெரும் சீற்றம் என குறியிடப்பட்ட இராணுவ நடவடிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சமநிலையை மட்டுமின்றி, உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளையும் ஆழமாக பாதித்துள்ளது.

இந்த தாக்குதலின் முக்கிய விளைவாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியின் உயிரிழப்பு மற்றும் அதன் இராணுவத்

தலைமை கடுமையாக சீர்குலைந்துள்ளது, இந்த நடவடிக்கை ஒரு விரைவான மற்றும் துல்லியமான ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக்

கொண்டதாக கருதப்பட்டாலும், அதன் விளைவுகள் முற்றிலும் எதிர்பாராத வகையில் பிராந்திய மோதலாக மாறியுள்ளது.

மாபெரும் உத்தியும்  தவறான கணிப்புகளும்

அமெரிக்காவின் “அதிர்ச்சி மற்றும் அச்சம்” என்ற இராணுவ உத்தி, ஈரானின் அரசியல் அமைப்பை உடைத்து உள்நாட்டு குழப்பத்தை

உருவாக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், இந்த கணிப்பு முற்றிலும் தவறானதாக மாறியுள்ளது. பல்வேறு உள்நாட்டு பிரிவினைகள்

இருந்தபோதிலும், ஈரான் தற்போது தேசிய பாதுகாப்பு மற்றும் மத அடையாளம் என்ற சக்திவாய்ந்த அடையாளங்களின் கீழ் ஒன்றுபட்டுள்ளது.

கமெனியின் மரணம், அரசியல் வெற்றிடத்தை உருவாக்கவில்லை. மாறாக, அவர் ஒரு தியாகியாக மாறி,

மக்களின் எதிர்ப்புத் தூண்டுதலை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அமெரிக்கா எதிர்பார்த்த அரசியல்

வீழ்ச்சி நிகழவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

பொருளாதார விளிம்பு – ஹார்முஸ் முட்டுக்கட்டை

இந்த மோதலின் மிக தீவிரமான மற்றும் உடனடி தாக்கம் உலகளாவிய எரிசக்தி துறையில் வெளிப்பட்டுள்ளது.

உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக நரம்பு எனக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணை, செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு இந்த கடல் பாதை வழியாகச் செல்லும் நிலையில்,

அதன் முடக்கம் உலக பொருளாதாரத்திற்கு நேரடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தைகளில்

எண்ணெய் விலை பீப்பாயொன்றுக்கு 200 அமெரிக்க டொலரை எட்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதன் விளைவாக, உலகளாவிய பணவீக்கம் கட்டுக்கடங்காத அளவிற்கு உயர்ந்து, ஐரோப்பாவில் வீட்டு வெப்பமூட்டல் செலவுகள் அதிகரித்துள்ளன. ஆசிய நாடுகளில் உற்பத்தி துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

இந்த இராணுவ நடவடிக்கையின் பின்னணி வெறும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தாண்டி, ஒரு விரிவான

புவிசார் அரசியல் வியூகத்தின் பகுதியாகவே பார்க்கப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம்,

இந்த தாக்குதலின் மூலம் சீனாவின் எரிசக்தி ஆதாரங்களை கட்டுப்படுத்தவும், மத்திய கிழக்கில் புதிய அரசியல் ஒழுங்கை உருவாக்கவும், மேலும் இஸ்ரேலின் பிராந்திய ஆதிக்கத்தை உறுதி செய்யவும் முயன்றதாக மதிப்பிடப்படுகிறது.

ஆனால், இந்த வியூக இலக்குகள் பல முக்கிய தவறான கணிப்புகளின் அடிப்படையில் அமைந்திருந்தன. குறிப்பாக, ஈரானின் புவியியல் அமைப்பு மலைப்பகுதிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு கட்டமைப்புகள் ஒரு நேரடி தரைபடையெடுப்பை மிகவும் கடினமாக்குகின்றன. மேலும், ஈரான் தனது உள்நாட்டு இராணுவ திறன்களைப் பயன்படுத்தி நீண்டகால மோதலை தாங்கக்கூடிய நிலையிலும் உள்ளது.

இராணுவ ரீதியாக பார்க்கும்போது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேம்பட்ட தொழில்நுட்ப ஆயுதங்களை கொண்டிருந்தாலும், ஈரானின் பலம் அதன் பொறுமை மற்றும் நீடித்த போர்திறனில் இருக்கிறது. சுமார் 45,000 ஏவுகணைகள், விரிவடைந்த ட்ரோன் உற்பத்தி திறன், மற்றும் நீண்டகால போரை தாங்கும் உள்நாட்டு அமைப்பு ஆகியவை, இந்த மோதலை ஒரு விரைவான வெற்றியாக மாற்றாமல், நீண்டகால சோர்வு போராக மாற்றும் அபாயத்தை உருவாக்குகின்றன. இதன் காரணமாக, எந்த தரப்பும் விரைவில் தீர்மானமிக்க வெற்றியைப் பெற முடியாத ஒரு முட்டுக்கட்டை நிலை உருவாகியுள்ளது.

பாரம்பரிய கூட்டணிகளின் தோல்வி

இந்த சூழலில், சர்வதேச கூட்டணிகளின் நிலைப்பாடு கூட அமெரிக்காவிற்கு எதிர்பாராத சவாலாக மாறியுள்ளது.

நேட்டோ நாடுகள் உட்பட பல பாரம்பரிய நட்பு நாடுகள், நேரடி இராணுவ தலையீட்டைத் தவிர்க்க முனைந்துள்ளன.

குறிப்பாக, ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாகத் திறக்க கடற்படைகளை அனுப்புவதில் அவர்கள் காட்டும் தயக்கம்,

மேற்கத்திய கூட்டணிகளில் உள்ள ஆழமான பிளவுகளை வெளிப்படுத்துகிறது.

ஐரோப்பிய நாடுகள், ஏற்கனவே எரிசக்தி விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பொருளாதார சுமையை ஏற்கத் தயங்குகின்றன.

இதேவேளை, இந்த மோதல் உலக வல்லரசுகளின் மறைமுக மோதலாகவும் மாறியுள்ளது. சீனாவும் ரஷ்யாவும், ஈரானுக்கு பல்வேறு வடிவங்களில் ஆதரவை வழங்கி வருகின்றன. செயற்கைக்கோள் உளவு தகவல்கள், மின்னணு போர் உதவிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகள் மூலம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொழில்நுட்ப முன்னிலை குறைக்கப்படுகின்றது எனக் கூறப்படுகிறது.

இதன் மூலம், இந்த மோதல் ஒரு பிராந்தியப் போரிலிருந்து, உலகளாவிய சக்தி போட்டியின் ஒரு முக்கிய மேடையாக மாறியுள்ளது.

இந்த அனைத்துப் பரிமாணங்களையும் கருத்தில் கொண்டால், உலக பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.

எரிசக்தி விலை உயர்வு, உலகளாவிய பணவீக்கம், வர்த்தக சங்கிலி சிதைவு, மற்றும் நாணய மதிப்பிழப்பு ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து, ஒரு பெரிய நிதி நெருக்கடியை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில் இந்தப் போர் நீடித்தால், உலக நிதி அமைப்பே சீர்குலையும் அபாயம் உள்ளது என பல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரே தீர்வு

இந்த சூழலில், மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஒரு விரிவான மற்றும் சமநிலையான மாபெரும் உடன்படிக்கை அவசியமாகியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய மூன்று முக்கிய தரப்புகளும், தங்களது அடிப்படை பாதுகாப்பு கவலைகளைத் தீர்க்கும் வகையில்

பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்குவது, மற்றும் இராணுவ நடவடிக்கைகளை குறைப்பது போன்ற அம்சங்கள் இந்த உடன்படிக்கையின் மையமாக இருக்க வேண்டும்.

இந்திய மற்றும் இலங்கை தலையீட்டிற்கான வாதம்

இந்த நெருக்கடியான தருணத்தில், இந்தியா ஒரு முக்கிய மத்தியஸ்த சக்தியாக உருவெடுக்கக்கூடிய நிலையில் உள்ளது.

இஸ்ரேலுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளையும், ஈரானுடன் நீண்டகால வரலாற்று மற்றும் எரிசக்தி தொடர்புகளையும் பேணும் இந்தியா,

ஒரு சமநிலையான அணுகுமுறையை வழங்கக்கூடிய நாடாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின்

பொருளாதார வளர்ச்சியை நேரடியாக பாதிக்கும் நிலையில், இந்த மோதலை தணிக்க இந்தியா முன்வருவது அதன் தேசிய நலனுக்கும் இணங்குகிறது.

அதேபோன்று, இலங்கை தனது அணிசேரா வெளிநாட்டு கொள்கை மரபின் அடிப்படையில், நடுநிலை மத்தியஸ்த முயற்சிகளில் பங்கேற்கக்கூடிய திறனை கொண்டுள்ளது. ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க காலங்களில்,

இலங்கை சர்வதேச இராஜதந்திரத்தில் முக்கிய பங்காற்றியதன் வரலாறு உள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் அந்த திறனை மீண்டும் உருவாக்குவது ஒரு சவாலாகவே உள்ளது. இதற்கு வலுவான தலைமைத்துவம், நுண்ணறிவு மற்றும் உலக அரசியல் பற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது.

முடிவாக , 2026 ஈரான் போர் ஒரு சாதாரண பிராந்திய மோதலைத் தாண்டி, உலகளாவிய அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது.எனவே, உடனடி பேச்சுவார்த்தை, சமரசம் மற்றும் சர்வதேச மத்தியஸ்தம் மட்டுமே இந்த ஆபத்தான நிலையை கட்டுப்படுத்தக்கூடிய ஒரே வழியாக பார்க்கப்படுகிறது.

பாலகணேஷ் டிலுக்ஷா

The post மாபெரும் சீற்றத்தின் நிழல் – உலக பொருளாதாரத்தை அதிர வைத்த ஹார்முஸ் முட்டுக்கட்டை appeared first on Oruvan.com.

இஸ்ரேலிய துருப்புகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா தாக்குதல்
இஸ்ரேலிய தளங்கள் மற்றும் துருப்புகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு இஸ்ரேலில் உள்ள தளங்களையும், தெற்கு லெபனானில் உள்ள இஸ்ரேலியப் படைகளையும் குறிவைத்து பல தாக்குதல்களை நடத்தியுள்ளதாக லெபனானிய ஆயுதக் குழு தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானின் அல்-ஆதைசா நகரின் கானூக் பகுதியில், காலை 8:20 மற்றும் 8:15க்கு இஸ்ரேலியப் வீரர்கள் மீது இரண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தெற்கு லெபனானில் ஆறு வீரர்கள் காயமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மூன்று வெவ்வேறு சம்பவங்களில் வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் மூன்று பேர் பலத்த காயமடைந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பீரங்கி எதிர்ப்புத் தாக்குதலிலும், மூவர் ஆளில்லா விமானத் தாக்குதலிலும், மற்றொருவர் செயல்பாட்டு விபத்திலும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இஸ்ரேலிய துருப்புகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா தாக்குதல் appeared first on Oruvan.com.

இஸ்ரேலின் புதிய குடியேற்றங்களுக்கு பிரிட்டன் உட்பட 14 நாடுகள் கண்டனம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் புதிய யூத குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் அண்மையில் அளித்த அனுமதியை பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட 14 நாடுகள் கண்டித்துள்ளன.

‘ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 19 புதிய குடியேற்றங்களுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்ததை பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஜப்பான், மோல்டா, நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் கண்டிப்பதாக’ அந்நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘எந்த ஒரு இணைப்பு மற்றும் குடியேற்றக் கொள்கைகளின் விரிவாக்கத்தையும் தெளிவாக எதிர்க்கிறோம் என்பதை நாம் நினைவுகூர்கிறோம்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய குடியேற்றங்கள் தொடர்பிலான அறிவிப்பை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதி அமைச்சரான பெசலல் ஸ்மொட்ரிச் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்தார். பலஸ்தீன நாடு ஒன்று உருவாவதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகள் சர்வதேச சட்டத்தை மீறுவதோடு காசாவில் அமுலில் இருக்கும் பலவீனமான போர் நிறுத்தத்தை பாதிக்கச் செய்யும் என்று பதினான்கு நாடுகளின் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முடிவு மற்றும் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதை மீளப் பெறும்படி மேற்படி நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

1967 போருக்கு பின்னரே மேற்குக் கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இதில் 1967 இல் கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் தனது ஆட்புலத்திற்கு சேர்த்தது. மேற்குக் கரையில் சுமார் மூன்று மில்லியன் பலஸ்தீனர்களுடன் 500,000 இற்கும் அதிகமான இஸ்ரேலியர் வசிக்கின்றனர்.

2023 ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரித்திருப்பதோடு அங்கு இஸ்ரேலியப் படைகள் அடிக்கடி சுற்றுவளைப்புகளை நடத்துவதோடு இஸ்ரேலிய குடியேறிகள் பலஸ்தீன கிராமங்களில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த வன்முறைகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மறுபுறம் காசாவில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி தொடக்கம் போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதும் அங்கு இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

வடக்கு காசாவின் ஜபலியா பகுதியில் இஸ்ரேலிய படைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கு இடத்திற்கு அருகே அந்தப் படைகள் நடத்திய துப்பாப்பிச் சூட்டில் நேற்று (25) மேலும் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் 400 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இஸ்ரேலின் புதிய குடியேற்றங்களுக்கு பிரிட்டன் உட்பட 14 நாடுகள் கண்டனம் appeared first on Oruvan.com.

இஸ்ரேலை சென்றடைந்தார் டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13) ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளார்.

இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு வந்த டொனால்டு டிரம்ப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார்.

ஹமாஸ் ஏழு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் முதல் தொகுதியை விடுவித்துள்ளது. இதைத் தொடர்ந்து விரைவில் பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.

காசா சமாதான உச்சிமாநாட்டிற்காக எகிப்துக்குச் செல்வதற்கு முன்பு, பணயக்கைதிகளின் குடும்பத்தினரை டிரம்ப் சந்தித்து இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஹமாஸ் தங்கள் வசம் உள்ள 20 இஸ்ரேலிய பணய கைதிகளை இன்று விடுதலை செய்கிறது.

முதற்கட்டமாக ஏழு பணய கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பணய கைதிகள் இன்னும் சற்று நேரத்தில் விடுதலை செய்யப்பட்ட உள்ளனர்.

மேலும், ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்ட மேலும் 28 இஸ்ரேலிய பணய கைதிகளின் உடல்களும் இன்று ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இஸ்ரேலை சென்றடைந்தார் டொனால்ட் டிரம்ப் appeared first on Oruvan.com.

போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் இணக்கம்!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரை நிறுத்த இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அமைதிக்கான முதல் கட்ட திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஒப்பந்தத்தின்படி அனைத்துப் பிணைக் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.

அதேபோல் இஸ்ரேல் தனது படையைக் காஸாவிலிருந்து மீட்டுக்கொள்ளும். அமைதிக்கான முதல் அடியை வலிமையாக எடுத்து வைத்துள்ளோம்,” என்று டிரம்ப் சுட்டிக்காட்டியள்ளார்.

“அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள். இஸ்ரேல், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு இது ஒரு சிறப்பான நாள். அமைதிப் பேச்சுக்குத் துணையாக இருந்த கத்தார், எகிப்து, துருக்கிக்கு நன்றி,” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்துள்ள நிலையில், அமைதிக்காக 20 அம்சத் திட்டத்தை கடந்த வாரம் டிரம்ப் வெளியிட்டார்.

இதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருந்தனர். இந்த இருதரப்பினருக்கும் இடையிலான போர் அண்டைய நாடுகளுக்கும் பரவிய நிலையில் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கத்தார், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாள்களாக எகிப்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர்களுக்கு இடையே மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தப் பின்னணியிலேயே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் தரப்பும் உறுதி செய்துள்ளது.

எனினும், இஸ்ரேல் தனது படையைக் காஸாவிலிருந்து முழுமையாக மீட்டுக்கொள்வதை அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என ஹமாஸ் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் உயிரிழந்ததுடன், 251 பேர் பணையக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காஸாமீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அதில் 67,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் இணக்கம்!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு appeared first on Oruvan.com.

இஸ்ரேலுக்கு பின்னடைவு – பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன
பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பல்வேறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன.

பிரான்சைத் தவிர, பெல்ஜியம், லக்சம்பர்க், மோல்டா, மொனாக்கோ, அன்டோரா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தன.

முன்னதாக, அவுஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்திருந்தன.

நேரம் வந்துவிட்டதால் நாங்கள் இங்கு கூடியுள்ளோம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே எங்கள் குறிக்கோள் என்று மக்ரோன் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச சமூகத்தில் 80 சதவீதம் பேர் இப்போது பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றனர்.

இது காசாவில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது கடுமையான இராஜதந்திர அழுத்தத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பல நாடுகள் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக அறிவித்ததால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு அச்சுறுத்தலை முன்வைத்துள்ளார்.

ஜோர்டான் நதிக்கு மேற்கே இனி ஒரு பாலஸ்தீன நாடு இருக்காது என்றும், பாலஸ்தீன அரசை உருவாக்க அழைப்பு விடுப்பது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கு சமம் என்றும் நெதன்யாகு தெளிவுபடுத்தினார்.

ஹமாஸை அழிப்பதன் மூலம் போர் இலக்கு அடையப்படும் என்றும் அவர் கூறினார். ஈரானிய அச்சு அழிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் நட்பு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்ததால் நெதன்யாகு ஆத்திரமடைந்துள்ளார்.

இப்போது ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பாதையை எடுக்கத் தொடங்கியுள்ளன.

காசாவில் இஸ்ரேலின் கொடூரமும் படுகொலையும் ஐரோப்பிய நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிரான பொதுமக்களின் உணர்வை எழுப்பியுள்ளது.

The post இஸ்ரேலுக்கு பின்னடைவு – பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன appeared first on Oruvan.com.