UK News Archives - Oruvan.com

மத்திய கிழக்கு போர் பிரித்தானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – புதிய ஆய்வில் தகவல்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் பிரித்தானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வு ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய கிழக்கு மோதல் காரணமாக 66 வீத மக்கள் எதிர்வரும் மாதங்களின் நிதி நிலைமை குறித்துக் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பத்தில் மூன்று பேர் உணவு மற்றும் எரிசக்தி போன்ற அடிப்படைத் தேவைகளைக் குறைத்துக்கொண்டுள்ளதாகவும் கண்டறியக்கப்பட்டுள்ளது.

38 சதவீத மக்கள் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது தங்களின் நிதி நிலைமை மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 25 சதவீதம் பேர் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கத் தங்கள் சேமிப்பைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் ஆறில் ஒருவர் தங்களுக்குப் பிரியமானவரிடமோ அல்லது நண்பரிடமோ கடன் வாங்கியதாகவும், 51 சதவீதம் பேர் தாங்கள் கடனில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

12 சதவீத மக்கள், கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமாகிவிட்டதாகக் கூறியுள்ளதாக அந்த ஆய்வில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மத்திய கிழக்கு போர் பிரித்தானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – புதிய ஆய்வில் தகவல் appeared first on Oruvan.com.

ஈரான் போரால் பிரித்தானியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம்
இந்த ஆண்டு பிரித்தானியாவின் பொருளதாரம் மந்த நிலையை நெருங்கும் எனவும், சுமார் 250,000 பேர் வேலை இழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள போர் நெருக்கடியால் இந்த நிலை உருவாகும் என சுயாதீன ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹார்மூஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பால் எதிர்வரும் மாதங்களில் விநியோகச் சங்கிலிகள் முழுவதும் பாதிப்படைந்து, வாங்கும் திறனைப் பெருமளவில் பாதிக்கும் என்று தி ஐட்டம் கிளப் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதார வளர்ச்சி வெறும் 0.7 வீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு எட்டப்பட்ட நிலையற்ற 1.4 வீத வளர்ச்சியில் பாதியாகும்.

மேலும், வேலைவாய்ப்புச் சந்தையானது கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வேலையின்மை விகிதம் தற்போதைய 5.2 வீத நிலையில் இருந்து அடுத்த ஆண்டுக்குள் 5.8 வீதமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

உயர்ந்துவரும் எரிசக்திச் செலவுகளும், விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் இடையூறுகளும், இந்த ஆண்டின் மத்தியில் ஐக்கிய ராச்சியத்தை ஒரு தொழில்நுட்பப் பொருளாதார மந்தநிலையின் விளிம்பிற்குத் தள்ளும் என ஐட்டம் கிளப்பின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான மாட் ஸ்வானெல் தெரிவித்துள்ளார்.

The post ஈரான் போரால் பிரித்தானியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் appeared first on Oruvan.com.

பிரித்தானியாவின் பாரம்பரிய இரு கட்சி அரசியல் முடிவுக்கு வருகின்றதா?
உள்ளாட்சி தேர்தல்களின் பின்னர் பிரித்தானியாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் சமீபத்திய இடைத்தேர்தல்களுக்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் களம் வேகமாக மாறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் தேர்தல் நடவடிக்கைகள் உச்சத்தில் இருக்க, மறுபுறம் எதிர்பாராத முடிவுகள் முக்கிய கட்சிகளுக்கு அபாய மணியை எழுப்பியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரிபோர்ம் யுகே கட்சி, இங்கிலாந்தில் உள்ள பல கவுன்சில்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

அத்துடன், இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று இரண்டு பகுதிகளில் இரண்டாவது மேயரையும் உறுதி செய்துள்ளது.

இந்த நிகழ்வானது, பிரித்தானியாவின் பாரம்பரிய இரு கட்சி அரசியலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக விவரிக்கப்பட்டுள்ளது.

அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கன்சர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி மற்றும் லிபரல் டெமோக்ராட்ஸ் கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது.

இந்நிலையில், பசுமைக் கட்சியும் பல துறைகளில் தனது நிலையை வலுப்படுத்த முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சமீபத்திய முடிவுகள் ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டார். அதே நேரத்தில் ரிபோர்ம் யுகே கட்சியின் தலைவர் நைஜல் ஃபாரேஜ் இது இரு கட்சி அரசியலின் முடிவின் அறிகுறி என்று தெரிவித்துள்ளார்.

பல பகுதிகளில், குறிப்பாக வடமேற்கு இங்கிலாந்தில், அரசியல் சூழல் நிச்சயமற்றதாக உள்ளது. அங்கு கடந்த காலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன.

இந்நிலையில், இந்த முறையும் பெரிய எதிர்பாராத திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

The post பிரித்தானியாவின் பாரம்பரிய இரு கட்சி அரசியல் முடிவுக்கு வருகின்றதா? appeared first on Oruvan.com.

பிரித்தானியாவில் கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு
பிரித்தானியாவில் கடவுச்சீட்டு விண்ணப்ப கட்டணங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.

கட்டணங்கள் எட்டு வீதம் அதிகரிப்பதால், கடவுச்சீட்டு கட்டணங்கள் முதல் முறையாக 100 பவுண்ட்ஸை தாண்டும் என்று உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, ஐக்கிய இராச்சியத்திற்குள் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்லைனில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களுக்கான கட்டணம் 94.50 பவுண்ட்ஸில் இருந்து 102 பவுண்ட்ஸாக அதிகரிக்கப்படவுள்ளது.

16 வயதுக்குட்பட்டவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம் , தற்போதைய 61.50 பவுண்ட்ஸில் £66.50 பவுண்ட்ஸாக அதிகரிக்கப்படவுள்ளது.

தபால் மூலமான விண்ணப்பங்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கும் இதே போன்ற சதவீத அதிகரிப்புகள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படும் இந்த மாற்றங்கள், நாளை எட்டாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரித்தானியாவில் கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

இங்கிலாந்தில் திட்டம் 2 மாணவர் கடன் வட்டி விகிதங்களுக்கு உச்சவரம்பு
பிரித்தானியாவில் மாணவர் கடன்களுக்கான வட்டி ஆறு வீதமாக கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்க அபாயத்திலிருந்து பட்டதாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில், திட்டம் இரண்டு மற்றும் முதுகலைப் பட்டக் கடன்களுக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, செப்டம்பர் 2012 முதல் ஜூலை 2023 வரை இங்கிலாந்தில் வழங்கப்பட்டு, வேல்ஸில் தற்போதும் வழங்கப்பட்டு வரும் திட்டம் 2 மாணவர் கடன்களுக்கு, 2026-27 கல்வியாண்டிற்கான இந்த உச்சவரம்பு பொருந்தும்.

இது திட்டம் மூன்று அல்லது முதுகலைப் பட்டக் கடன்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உச்சவரம்புகள் கடன் வாங்குபவர்களுக்கு உடனடிப் பாதுகாப்பை வழங்கும் எனவும் ஏற்கனவே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இங்கிலாந்தில் திட்டம் 2 மாணவர் கடன் வட்டி விகிதங்களுக்கு உச்சவரம்பு appeared first on Oruvan.com.

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் வழங்கப்பட்ட சலுகை – ஒரு மாதம் கடந்த பின்னரும் எந்த முடிவுகளும் இல்லை
பிரித்தானியாவில் வசிக்கும் தஞ்சம் கோருவோர் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்காக, உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் வழங்கிய 40,000 பவுண்டுகள் சலுகை குறித்து எந்த முடிவுகளும் வெளியாகவில்லை.

இத்திட்டத்தை எத்தனை சதவீத மக்கள் ஏற்றுக்கொண்டனர், எத்தனை பேர் நிராகரித்தனர் என்ற விவரங்களை வெளியிட உள்துறைச் செயலாளர் தயக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் கன்சர்வேடிவ் கட்சியினர் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

புலம்பெயர்ந்தோரின் ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக சுமார் 158,000 பவுண்டுகள் செலவில் விடுதிகளில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

புலம்பெயர்ந்தோர் தாமாகவே நாட்டை விட்டு வெளியேறுவதற்காக, உள்துறைச் செயலாளர் ஒரு குடும்பத்திற்கு 10,000 பவுண்டுகள் மற்றும் விமான டிக்கெட்டை வழங்க சலுகை அறிவித்திருந்தார்.

மார்ச் ஐந்தாம் திகதி முதல் 12ஆம் திகதி வரை, புலம்பெயர்ந்தோர் இந்த சலுகை குறித்து முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டனர், எனினும், தற்போது அந்தச் சலுகை காலாவதியாகிவிட்டமையும் குறிப்பிடத்தககது.

The post பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் வழங்கப்பட்ட சலுகை – ஒரு மாதம் கடந்த பின்னரும் எந்த முடிவுகளும் இல்லை appeared first on Oruvan.com.

பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை அதிகரிப்பு
பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதல் வகுப்பு தபால்தலையின் விலை 10 பென்ஸ் அதிகரித்து தற்போது 1.80 பவுண்ட்ஸாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோல், இரண்டாம் வகுப்பு தபால்தலையின் விலை விலை நான்கு பென்ஸ் அதிகரித்து 91 பென்ஸாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநியோக இலக்குகளை அடையத் தவறியதற்காக தபால் சேவை விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தபால்தலைகளின் விலை மீளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அனுப்பும் கடிதங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதால் இந்த கட்டண உயர்வுகள் அவசியம் என ரோயல் மெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் செயல்திறன் சிறப்பாக இருந்தபோதிலும் விலை உயர்வு தொடர்வது குறித்து பல வணிக நிறுவனங்களும் நுகர்வோரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

The post பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை அதிகரிப்பு appeared first on Oruvan.com.

பிரித்தானிய பொலிஸார் தொடர்பில் வெளியான தகவல்
பிரித்தானியாவில் கடந்த ஆண்டு பதிவான 92 சதவீத கொள்ளைச் சம்பவங்களைத் தீர்ப்பதில் பொலிஸார் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஒரு சதவீதத்திற்கும் குறைவான தொலைபேசி திருட்டு வழக்குகளில் மட்டுமே சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள புலனாய்வு ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பெரும்பாலான பகுதிகளில் எந்தவொரு திருட்டுச் சம்பவத்திற்கும் தீர்வு காணப்படவில்லை என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2025ஆம் ஆண்டில் விசாரணை முடிக்கப்பட்ட 184,783 கொள்ளைச் சம்பவங்களில், சந்தேக நபர் அடையாளம் காணப்படாமலேயே 143,000 வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.

மேலும் 27,500 வழக்குகளில், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டும் அவர் மீது வழக்குத் தொடர முடியவில்லை, அதேசமயம் 400 வழக்குகளில் மேலதிக நடவடிக்கை பொது நலனுக்கு உகந்ததல்ல என்று கருதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிழல் உள்துறைச் செயலாளர் கிறிஸ் பிலிப், பொலிஸாரின் செயல்பாட்டை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

எனவே, அரசாங்கம் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post பிரித்தானிய பொலிஸார் தொடர்பில் வெளியான தகவல் appeared first on Oruvan.com.

பிரித்தானியா-பிரான்ஸ் ஒப்பந்தம் முடிவு!! ஆங்கில கால்வாயை கடக்க முடியாமா?
இங்கிலாந்துக்கும், பிரான்ஸூக்கும் இடையிலான ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், ஆங்கில கால்வாய் ஊடக நாட்டிற்குள் நுழையும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே , சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் மூலம் பிரான்சின் வடக்கு எல்லையில் காவல் பணிக்கான செலவில் மூன்றில் இரண்டு பங்கை பிரித்தானியா செலுத்துகிறது.

தற்போதைய ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமையும் காலாவதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 37வது பிரித்தானிய-பிரான்ஸ் உச்சிமாநாட்டில் தொடங்கியது.

அத்துடன், மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானிய அதிகாரிகள் கடந்த வாரம் பாரிஸ் சென்றிருந்தனர்.

சட்டவிரோத குடியேறிகள் பயணிக்கும் சிறு படகுகளை இடைமறிப்பதை அதிகரிக்குமாறு உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் பிரான்ஸ் அரசாங்கத்தை கோரிவருகின்றார்.

இதன் காரணமாக பிரான்ஸ் அரசுடனான புதிய ஒப்பந்தம் தாமதமாகியுள்ளதாக தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டது.

இந்த ஒப்பந்தத்தில் “நெகிழ்வுத்தன்மையையும் புதுமையையும்” சேர்க்க முயற்சிப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

The post பிரித்தானியா-பிரான்ஸ் ஒப்பந்தம் முடிவு!! ஆங்கில கால்வாயை கடக்க முடியாமா? appeared first on Oruvan.com.

பிரித்தானிய தூதுவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவு
உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரித்தானிய நாட்டு தூதுவர் ஒருவரை ரஷ்யா நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

குறித்த தூதரின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதுடன், இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

ரஷ்யாவின் பாதுகாப்பு சேவையான FSB, பிரித்தானிய தூதுவர் “தன்னைப் பற்றி தவறான தகவல்களை அளித்தார்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், முறைசாரா சந்திப்புகளின் போது ரஷ்யப் பொருளாதாரம் குறித்த தகவல்களைச் சேகரிக்க அவர் முயன்றதாகவும் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரஷ்ய ஊடக அறிக்கைகளின்படி, அந்தத் தூதர் “ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் உளவு மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டுகளை பிரித்தானியா முற்றிலும் மறுத்துள்ளது.

மேலும், ரஷ்யா ஒரு “ஆக்ரோஷமான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட துன்புறுத்தல் பிரச்சாரத்தை” மேற்கொண்டுள்ளதாகவும் பிரித்தானியா கூறியுள்ளது.

பிரித்தானிய தூதரக ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அச்சுறுத்துவதை ஐக்கிய இராச்சியம் சகித்துக்கொள்ளாது என வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

The post பிரித்தானிய தூதுவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவு appeared first on Oruvan.com.