Thailand Archives - Oruvan.com

தாய்வானை கடுமையாக தாக்கியது ரகாசா சூறாவளி – 14 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக கருதப்படும் ரகாசா தாய்வானை கடுமையாக தாக்கிய நிலையில், சீனாவின் தென் கடல் பகுதியை ஊடறுத்து ஹொங்கொங்கை தாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த சூறாவளி காரணமாக தாய்வானில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதுடன் வௌ்ள நிலையும் ஏற்பட்டுள்ளது.

தாய்வானின் கிழக்கு ஹுவாலியனில் உள்ள ஒரு ஏரியில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் 14 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இந்த அனர்த்தத்தில் 120க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தாய்வானின் தீயணைப்பு படை அறிவித்துள்ளது.

அதேநேரம், இந்த சூறாவளி காரணமாக தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலிருந்து சுமார் 370,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஹொங்கொங் தமது எச்சரிக்கையை 10ஆம் நிலைக்கு உயர்த்தியுள்ளது, இது உச்சபட்ச எச்சரிக்கையாகும்.

இதன்காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன், ரகாசா சூறாவளி ஹொங்கொங்கை தாக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹொங்கொங் விமான நிலையம் 36 மணிநேரம் மூடப்பட்டுள்ளது.

தெற்கு சீன பகுதியில் அடுத்த சில மணி நேரங்களுக்குள் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக பாரிய மண்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்கூறப்பட்டுள்ளது.

The post தாய்வானை கடுமையாக தாக்கியது ரகாசா சூறாவளி – 14 பேர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலை வழங்கும் தாய்லாந்து
தொழிலாளர் பற்றாக்குறையை நிர்வகிக்க 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தாய்லாந்து ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

கம்போடியா மற்றும் தாய்லாந்துக்கு இடையில் அண்மையில் ஏற்பட்ட எல்லை பதற்றங்களுக்கு மத்தியில் தாய்லாந்திருந்து கம்போடியா தொழிலாளர்கள் தமது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், தாய்லாந்தில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின்படி, வயதான மக்கள் தொகை மற்றும் குறைந்து வரும் உள்நாட்டு பணியாளர்களை எதிர்கொள்ளும் தாய்லாந்து, விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் ஏற்கனவே மூன்று மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களைச் சார்ந்துள்ளது.

தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் பொங்கவின் ஜங்ருங்ருங்கிட் கூறுகையில், 30,000 க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்.

ஆரம்ப கட்டத்தில் 10,000 பேர் பணியமர்த்தப்படுவார்கள். புதிய கொள்கையின் கீழ் நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

கடந்த மாதம் தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே ஏற்பட்ட எல்லை மோதலில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டு 300,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இரு நாடுகளும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன, ஆனால் ஆயிரக்கணக்கான கம்போடிய தொழிலாளர்கள் நாடு திரும்பியதால்தாய்லாந்தின் தொழிலாளர் நெருக்கடி மோசமாக்கியுள்ளது.

The post 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலை வழங்கும் தாய்லாந்து appeared first on Oruvan.com.

தாய்லாந்து மற்றும் கம்போடியா போர் – இன்று அமைதிப் பேச்சுவார்த்தை
தாய்லாந்து மற்றும் கம்போடியா தலைவர்கள் இன்று மாலை மலேசியாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான எல்லைப் பிரச்சினை கடந்த 24 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமானதைத் தொடர்ந்து 33 பேர் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்காணோர் இடம்பெயர்ந்தனர்.

இரு நாடுகளையும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியதைத் தொடர்ந்து இருநாடுகளும் அமைதியை ஏற்படுத்த ஒப்புக்கொண்டன.

தாய்லாந்தை விட பலவீனமான இராணுவத்தைக் கொண்ட கம்போடியா, உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

எவ்வாறாயினும் எந்தவொரு போர்நிறுத்தத்திற்கும் முன்னர் கலந்துரையாடல் இடம்பெற வேண்டும் என தாய்லாந்து கூறியதைத் தொடர்ந்து மலேசியாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

The post தாய்லாந்து மற்றும் கம்போடியா போர் – இன்று அமைதிப் பேச்சுவார்த்தை appeared first on Oruvan.com.

இலங்கை – தாய்லாந்து அரசியல் ஆலோசனைகளின் ஆறாவது சுற்று நாளை மறுதினம்
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான 06 அவது சுற்று இருதரப்பு அரசியல் கலந்துரையாடல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேங்கொக்கில் உள்ள தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தில் , இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் தாய்லாந்தின் வெளியுறவுத்துறை செயலாளர் எக்சிரி பின்தருச்சி ஆகியோர் இணைந்து இந்த ஆலோசனைகளுக்கு தலைமை தாங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் மற்றும் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி

மாதத்தில் முன்னாள் தாய்லாந்து பிரதமரின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ வருகைக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை எதிர்வரும் ஆலோசனைக் கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்படும்.

இந்த ஆண்டு இலங்கையும் தாய்லாந்தும் இராஜதந்திர உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், அரசியல் ஈடுபாடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மீன்வளம் மற்றும் விவசாயத் துறை ஒத்துழைப்பு, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த விவாதங்களில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இலங்கை – தாய்லாந்து அரசியல் ஆலோசனைகளின் ஆறாவது சுற்று  நாளை மறுதினம் appeared first on Oruvan.com.