rice Archives - Oruvan.com

அரிசி, குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகள் சுற்றிவளைப்பு
அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை முற்றுகையிட நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 24 ஆம் திகதி கண்டி, திருகோணமலை, காலி, தங்காலை மற்றும் ஹப்புத்தளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர்கள் பலர் அடையாளம் காணப்பட்டனர்.

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், திருகோணமலை, காலி, தங்காலை மற்றும் கிராந்துருகோட்டை வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அதேவேளை, ஹப்புத்தளையில் அரிசியை அதிக விலைக்கு விற்ற வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடிநீர் போத்தல்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக ஹப்புத்தளை வர்த்தகர் ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாவும், அனுராதபுரத்தில் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாவும் அபராதமாக விதிக்கப்பட்டது.

நுகர்வோரை ஏமாற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக இவ்வாறான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.

The post அரிசி, குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகள் சுற்றிவளைப்பு appeared first on Oruvan.com.

அதிக விலைக்கு அரிசி விற்பனை – நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்ததற்காக நாடு முழுவதும் 135 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்கள் மற்றும் அரிசி கையிருப்புக்களை மறைப்பவர்கள் மீதான சோதனைகள் தொடரும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் தனிப்பட்ட விற்பனையாளர்களுக்கு ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை அபராதம், ஐந்து மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே குற்றத்திற்காக தனியார் நிறுவனங்களுக்கு ஐந்து லட்சம் முதல் முதல் ஐந்து மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அரிசியை மறைத்து வைப்பது தொடர்பான வழக்குகளில், நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய பொருட்களை பறிமுதல் செய்வதோடு கூடுதலாக அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் விதிக்க அதிகாரம் இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அதிக விலைக்கு அரிசி விற்பனை – நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை appeared first on Oruvan.com.

மீண்டும் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாட்டை உருவாக்கி சிலர் அரிசியின் விலையை உயர்த்தி வருவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் மீண்டும் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

வெள்ளம் மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக இந்த வருடம் பெரும் போகத்தில் எதிர்பார்த்த அரிசி அறுவடை கிடைக்கவில்லை.

இந்த ஆண்டு நெல் அறுவடை 2.9 மில்லியன் மெற்றிக் தொன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2.6 மில்லியன் மெற்றிக் தொன்களாக குறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் சந்தையில் கீரி சம்பா, சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எவ்வாறாயினும், பண்டிகை காலத்தின் போது நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி அரிசியை வழங்குவதில் அரசாங்கம் தலையிடும்.

இதேவேளை, பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு, நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சோதனைகளை விரிவுபடுத்தியுள்ளது.

இதன்படி, அரிசி இருப்புக்களை மறைத்து வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகளை தேடி இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, இந்த நாட்களில் சந்தையில் முட்டையின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், தற்போது ஒரு முட்டை 25 ரூபா தொடக்கம் 30 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில், முட்டை உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளதால், முட்டையின் விலையை, 35 ரூபாய் அல்லது அதற்கு மேல் உயர்த்த வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

The post மீண்டும் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

உங்கள் வீட்டிலுள்ள இந்த பொருட்கள் எப்பொழுதும் காலியாகக் கூடாது
நமது வீட்டில் எப்பொழுதும் செல்வம் நிரம்பி வழிய வேண்டும் என்றால் சில விடயங்களை செய்தாக வேண்டும். அதாவது, வீட்டில் இருக்கும் சில பொருட்களை முழுமையாக காலியாக விடாமல் இருந்தாலே நமது வீட்டில் செல்வம் நிரம்பி வழியும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

பணப் பை

நீங்கள் உபயோகிக்கும் பணப் பையில் ஆகக் குறைந்தது ஒன்றிரண்டு பணத் தாள்களாவது கண்டிப்பாக இருக்க வேண்டும். உங்கள் பணப் பையிலிருக்கும் பணத்தை முழுமையாக செலவழித்து விடுவதைத் தவிர்க்கவும். இது தவிர உங்கள் பணப் பையில் சங்கு, கோமதி சக்கரம் போன்றவற்றைக் கூட வைக்கலாம்.

அரிசி

அரிசி என்பது மிகவும் முக்கியமான ஒரு பொருள். உங்கள் வீட்டில் என்றுமே அரிசி பாத்திரம் காலியாகிவிடக் கூடாது. அது முழுமையாக காலியாவதற்கு முன்பு அரிசி வாங்கி நிரப்பிவிட வேண்டும். அரிசி காலியானால் செல்வ நிலை குறையும் என கூறப்படுகிறது.

தண்ணீர் பானை

பூஜை அறையில் வைத்திருக்கும் தண்ணீர் பாத்திரம் எப்பொழுதும் நிரம்பியே இருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

காலியான வாளி

குளியலறையில் நீங்கள் வைத்திருக்கும் வாளியில் ஒருபோதும் நீர் காலியாகக் கூடாது. இதனால் வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும். இதனால் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும்.

The post உங்கள் வீட்டிலுள்ள இந்த பொருட்கள் எப்பொழுதும் காலியாகக் கூடாது appeared first on Oruvan.com.

அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தீவிரம்
நுகர்வோர் விவகார அதிகாரசபை இதுவரை அரிசி தொடர்பாக 2,000 இற்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைக் கண்டறிவதற்கு வார இறுதி நாட்களிலும் இரவு நேரங்களிலும் தற்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் கூறியுள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் இன்றைய தினமும் கொழும்பின் புறக்கோட்டைப் பகுதியில் பல சோதனைகளை

மேற்கொண்டனர்.

மேலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்காக விசேட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக

தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்ணள விலையை மீறுதல் மற்றும் விலையை காட்சிப்படுத்தாமைக்காக வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கும் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தமை தொடர்பில் ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால்

ஒரு தனிப்பட்ட வணிகத்திற்கு 100,000 ரூபா முதல் 500,000 ரூபா வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

The post அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தீவிரம் appeared first on Oruvan.com.

குறைந்த விலைக்கு அரிசி விநியோகிக்கப்படும் – விவசாய அமைச்சர்
விவசாயிகளிடமிருந்து நிர்ணய விலையின் கீழ் கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரசியாக்கி , தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில்

நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயம் மற்றும் கால்நடை துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளை கருத்திற்கொண்டு நிர்ணய விலையை அரசாங்கம் அறிவித்ததாக கூறிய அமைச்சர் அந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து  குறைந்த விலைக்கு அரிசி விநியோகிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

The post குறைந்த விலைக்கு அரிசி விநியோகிக்கப்படும் – விவசாய அமைச்சர் appeared first on Oruvan.com.

நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்வது கட்டாயம்
பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயம் என்று வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்தார்.

பெற்றுக்கொள்ளும் நெல் தொடர்பாக ஒரு தரவுத்தள அமைப்பை உருவாக்குவதும், நெல் இருப்புகளை மறைக்க முடியாத ஒரு திட்டத்தை உருவாக்குவதும் இதன் நோக்கம் என்று பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

தட்டுப்பாடு இல்லாமல் அரிசி வழங்கும் நோக்கில் அரசு நெல் கொள்முதல் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

நெல் மற்றும் அரிசிக்கான உத்தரவாத விலையை ஒரே நேரத்தில் தீர்மானித்து வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

The post நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்வது கட்டாயம் appeared first on Oruvan.com.

இனி அரிசியை இறக்குமதி செய்ய தேவையில்லை
அரிசியை இனிமேலும் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் அதன் காரணமாக அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிக்கப்படாது எனவும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அனுமதிப்பத்திரமின்றி அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியிருந்தது.

குறித்த அனுமதியுடன் தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் 150,000 மெட்றிக் தொன்னுக்கும் அதிகமான அரிசித் தொகையை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலும் அரிசியை இறக்குமதி செய்தால் சிக்கலான நிலை உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாக குறித்த உயர் அதிகாரி சுட்டிக்காட்டினார்.

பல பிரதேசங்களில் நெல் அறுவடை ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும் எதிர்வரும் நாட்களில் அரிசி பிரச்சினை இருக்காது என எதிர்ப்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

அனுமதிப்பத்திரமின்றி அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த 10ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

The post இனி அரிசியை இறக்குமதி செய்ய தேவையில்லை appeared first on Oruvan.com.

85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி
இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்ய அனுமதியளித்து இன்று (02) வரையில் 85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட அரிசி துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

குறித்த இறக்குமதி செய்யப்பட்ட 85,000 மெட்றிக் தொன் அரிசியில் 33,000 மெட்றிக் தொன் பச்சை அரிசியும் 52,000 மெட்றிக் தொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாகவும், மேலும் சுங்கத்திற்கு அனுப்பப்பட்ட இறக்குமதி அரிசி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அருக்கொட குறிப்பிட்டார்.

இந்த 85,000 மெட்றிக் தொன் அரிசியில் அரச நிறுவனமான அரச வர்த்தக பல்வேறு சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 780 மெற்றிக் தொன் அரிசியும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார்.

நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் கடந்த 4ஆம் திகதி முதல் வழங்கியுள்ளது.

The post 85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி appeared first on Oruvan.com.

அரிசி இறக்குமதிக்கு காலம் தாழ்த்தும் அநுர அரசாங்கம்!
நாடளாவிய ரீதியில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தாலும், அரசாங்கம் இதுவரையில் சிறிதளவு அரிசியை கூட இறக்குமதி செய்யவில்லை என சுங்கத் திணைக்களத்தின் தகவல் அறியும் வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் மற்றும் சதொச ஆகியவை அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்த போதிலும், சதொச மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு டெண்டர்களிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இதுவரை அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தவறியுள்ளதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தனியார் இறக்குமதியாளர்கள் 28,500 மெட்றிக் டொன் பச்சை அரிசி மற்றும் 38,500 மெட்றிக் டொன் நாட்டு அரிசித் தொகை எனும் அடிப்படையில் 67,000 மெட்றிக் டொன் அரிசி நேற்று (25) வரையில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

The post அரிசி இறக்குமதிக்கு காலம் தாழ்த்தும் அநுர அரசாங்கம்! appeared first on Oruvan.com.