Ramanathan Archchuna Archives - Oruvan.com

அர்ச்சுனா எம்.பிக்கு பிணை
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.

அதேவேளை அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில், கடந்த 25ம் திகதி குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

அதனை அடுத்து, கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலம் அளிக்க அர்ச்சுனா இராமநாதனை அழைத்து, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அர்ச்சுனாவை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து அர்ச்சுனா இராமநாதனை ஐந்து இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில், 20 ஆயிரம் ரூபா பெறுமதியான காசு பிணையிலும் செல்ல அனுமதித்த மன்று, எதிர் தரப்பினருடன் எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் போக கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.

அதேவேளை , அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என குற்றம் சாட்டப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் அவரும் மன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.

The post அர்ச்சுனா எம்.பிக்கு பிணை appeared first on Oruvan.com.

கைவிலங்குடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட அர்ச்சுனா எம்.பி
கைத்துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்படி, கையில் விலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை நடைமுறைகளுடன் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டிருந்தார்.

கடந்த 25ம் திகதி காணி பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண் ஒருவரை கைத்துப்பாக்கியை காட்டி அர்ச்சுனா எம்.பி அச்சுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து கடந்த 27ம் திகதி காலையில் இலவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

குறித்த காணி உரிமை தொடர்பாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அந்த நிலம் தனக்குச் சொந்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிவரும் நிலையில், ஒரு பெண்ணும் அந்த நிலத்திற்கு உரிமை கோரியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட நிலத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ​​அங்கு வந்த இரண்டு பெண்கள், அந்த நிலத்தின் ஒரு பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதால்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுானா கைத்துப்பாக்கியை காட்டி இந்த மிரட்டலை விடுத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கைவிலங்குடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட அர்ச்சுனா எம்.பி appeared first on Oruvan.com.

அர்ச்சுனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அர்ச்சுனா பிறந்த ஊர் மக்கள்!
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

பெரியவிளானில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் காணியானது பலவருடங்களாக துப்பரவு செய்யப்படாமல் பற்றை காடாக உள்ளது. அங்கு ஒரு பாழடைந்த கிணறுள் உள்ளது.

அந்த பற்றை காணிக்குள் விஷம் கொண்ட பாம்புகள் மற்றும் வேறு விஷ ஜந்துக்கள் என்பன காணப்படுகின்றன.

குறித்த காணியில் உள்ள பாம்புகள் வெளியேறி வீடுகள், வீதிகள், அருகில் உள்ள கடைகளுக்குள் வருவதால் மக்கள் மிகவும் அச்சத்தின் மத்தியில் இருக்கின்றனர்.

வீதியில் சிறியவர்களோ, பெரியவர்களோ யாரும் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. அருகில் உள்ள ஆலயத்துக்கு, அருகில் உள்ள கடைக்கு கூட செல்வதற்கு அச்சமாக இருக்கிறது.

மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர், தான் பல நல்ல விடயங்களை செய்வதாக வாயால் மட்டுமே கூறிக்கொண்டு இருப்பவர் தனது காணி குறித்து அக்கறை இல்லாமல் இருப்பது விசனத்தை ஏற்படுத்துகிறது.

காணியை சுத்தம் செய்யா விட்டால், பிரதேச சபையினால் அந்த காணியானது சுத்தம் செய்யப்பட்டு பிரதேச சபைக்கு உரியதாக மாற்றவேண்டிய நிலைமை கூட ஏற்படலாம்.

பெரியவிளானில் காணிகள், வீடுகள் இன்றி பல குடும்பங்கள் வாழ்கின்றன. அவர் ஒரு நல்ல நோக்கம் உள்ளவர் என்றால், தன்னால் பராமரிக்க முடியாத காணிகளை அந்த மக்களுக்கு வழங்கலாமே?

அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். ஆனால் அவர் பிறந்த ஊரான பெரியவிளான் பகுதியில் மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்கள் இருக்கின்றனர்.

புனரமைக்கப்படாத வீதிகள் இருக்கின்றன. செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் பல உள்ளன. அவற்றை எல்லாம் அவரால் செய்ய முடியாது, ஆனால் வாயால் வெட்டி பேச்சு பேச முடியும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல் ஆகியவற்றுக்கு பரீட்சை வைத்து அதில் சித்தி பெறுபவர்களையே போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறுகிறார்.

அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதுபோல நாங்களும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம்.. அதாவது, இனிமேல் நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனநிலை குறித்து பரீட்சித்து, அவர்கள் மனநலம் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக தான் இருக்கின்றார்களா என பரீட்சித்த பின்னரே தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றோம்.

இதை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றனர்.

The post அர்ச்சுனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அர்ச்சுனா பிறந்த ஊர் மக்கள்! appeared first on Oruvan.com.

தற்போதைய அரசாங்கம் 2029 வரை ஆட்சியில் இருக்க முடியாது – எச்சரிக்கும் அர்ச்சுனா எம்.பி
கடந்த அரசாங்கத்தைவிட தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்..

வடக்கில் உள்ள தமிழ் மக்கள் இதனை தற்போது உணர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தற்போதைய அரசாங்கம் 2029 வரை ஆட்சியில் இருக்க முடியாது. கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கும் அவர், தற்போதைய அரசாங்கம் 2029க்கு முன்பு அகற்றப்பட்டால், அக்கட்சி ஆயுதங்களை எடுக்கும் என்று கூறுகிறார்.

ஏதேனும் காரணத்தால் அதிகாரத்தை இழந்தால், அவர்கள் இனி ஒரு தேசிய மக்கள் சக்தியாக செயல்படாமல் ஆயுதங்களை எடுக்க வேண்டிய அபாயம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிதி மோசடி மற்றும் ஊழல் விசாரணைகள் இதுவரை வெற்றிபெறவில்லை என்றும் அர்ச்சுனா ராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று  நினைத்தோம்.   ஊழல், மோசடி தொடர்பில் அதிகளவான கோப்புகள் இருப்பதாக கூறினார்கள்.

அந்த கோப்புகள் இப்போது எங்கே? உகாண்டாவில் இருப்பதாகக் கூறப்பட்ட பணம் எங்கே? ஈஸ்டர் தாக்குதல்களுக்கு நீதி எங்கே? அர்ஜுன மகேந்திரன் நாட்டிற்கு அழைத்துவரப்படமாட்டார்களா?” என்றும் கேள்வியெழுப்பினார்.

கடந்த அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் அதிகமாக உள்ளது என்றும் அர்ச்சுனா ராமநாதன் சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் ஆதரிக்க அவர் தன்னால் முடிந்தவரை முயற்சித்த போதிலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக வடக்கு மக்கள் இப்போது உண்மையை உணர்ந்து வருகின்றனர்.

தனக்கு தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லை என்றும், தான் சொல்வது உண்மை என்றும் அர்ச்சுனா ராமநாதன் எம்.பி குறிப்பிட்டார்.

மேலும் இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை தொடர்ந்து அளித்தால், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தன்னுடன் எதிர்க்கட்சியின் முன் வரிசையில் அமர வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post தற்போதைய அரசாங்கம் 2029 வரை ஆட்சியில் இருக்க முடியாது – எச்சரிக்கும் அர்ச்சுனா எம்.பி appeared first on Oruvan.com.

அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுதலை
கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் இன்று காலை கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

The post அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுதலை appeared first on Oruvan.com.

அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுதலை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அர்ச்சுனா எம்.பி கைது

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிக்க கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று (29) காலை வந்திருந்த நிலையில் அவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்றிருந்த போராட்டத்தில் கலந்து கொண்ட போது வாகனத்தை நிறுத்துவது தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருந்தது.

இதன்போது போக்குவரத்து பொலிஸார் ஒருவரை முட்டாள் என அர்ச்சுனா எம்.பி திட்டியிருந்தார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை  பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை வந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

The post அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுதலை appeared first on Oruvan.com.

நாடாளுமன்ற பொது கழிப்பறையை இரவிலும் திறந்து வையுங்கள் – அர்ச்சுனா எம்.பி கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று சபையில் ஒழுங்கு பிரச்சினையையாக பாராளுமன்ற பொதுக்கழிப்பறை கழிப்பறை பூட்டப்படுவது பற்றி கேள்வி எழுப்பினார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாடாளுமன்றத்தில் உள்ள எங்கள் பொது கழிப்பறை 4:30 மணிக்கு மூடப்படும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஏன் என்று கேள்வி கேட்டால், கழிப்பறையில் உள்ள உபகரணங்களை கழற்றி எடுத்துச் சொல்லப்படுவதால் தான் அதை மூடுவதாக கூறுகின்றாரகள்.

இதனால் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றது . எனவே, இரவில் கூட பொது கழிப்பறையை திறந்து வைக்கச் சொல்ல சொல்லுங்கள்,” என்று அர்ச்சுனா எம்.பி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

The post நாடாளுமன்ற பொது கழிப்பறையை இரவிலும் திறந்து வையுங்கள் – அர்ச்சுனா எம்.பி கோரிக்கை appeared first on Oruvan.com.

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா எம்.பி appeared first on Oruvan.com.

பல்வேறு குழப்பங்களுடன் நிறைவடைந்தது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பல தனிநபர் விமர்சனங்கள், குழப்பங்கள் என்ற பல்வேறு வாதப் பிரதிவாதங்களுடன் வழமைபோன்று எதிர்பார்ப்புகள் பெரிதாக நிறைவேறாத நிலையில் முடிவடைந்தது.

எனினும், வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள சில பதவிகளுக்கு ஆளணியை நிரப்புவதற்கு அனுமதி கிடைத்துள்ளது என்ற செய்தியுடன் நேற்றையக் கூட்டம் நிறைவுக்கு வந்தது

குறிப்பாக தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட சில தொழில்துறைக்கான ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விரைவில் அவை நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் தலைமையில் இணைத்தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான வேதநாயகனின் பங்கேற்புடன் நேற்று ( 17.07.2025) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலாகவே இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இதனிடையே யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்திக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

கூட்டத்தில் கருத்து தெரிவித்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி, “யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும். நோயாளிகளாக உருவாக்க வேண்டாம்

இங்கு வருபவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம், அமைச்சர்களாக இருக்கலாம். ஆனால் உயர் அதிகாரிகளுக்கு மதிப்பளிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

கூட்டத்திற்கு வந்து கூச்சலிடுவதால், அதிகமாக சத்தமிடுவதால் இதய ரீதியான தாக்கங்கள் இடம்பெறும். இதனால் அமைதியான முறையில் கூட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று வலியுறுத்தினார்.

இதன்போது குறுக்கிட்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கேள்விகள் கேட்க்கப்பட்டால் அதற்கான பதிலை வழங்குமாறும், கேட்கவேண்டிய கேள்விகளை உரிய சந்தர்ப்பத்தில் கேட்டாக வேண்டும்” என கூறியுள்ளார்.

வீதி அவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு, போக்குவரத்து, மின்சாரம், வீடமைப்பு, சட்டம் ஒழுங்கு, கடற்றொழில், விவசாயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்ட இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் திணைக்கள தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post பல்வேறு குழப்பங்களுடன் நிறைவடைந்தது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் appeared first on Oruvan.com.

அர்ச்சுனா எம்.பியின் RTI கோரிக்கையை நிராகரித்தது நாடாளுமன்றம்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்கருடன் நடைபெற்ற சந்திப்பின் காட்சிகளை வெளியிட நாடாளுமன்றம் முற்றிலுமாக மறுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றின் இந்த நடவடிக்கையானது நமது அடிப்படை தகவல் அறியும் உரிமையை அப்பட்டமாக மீறுவதாகும் எனவும் அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான தகவல்களை இவ்வாறு ரகசியமாக மறைப்பது வெளிப்படைத்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது எனவும், பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு ஜனநாயக சமூகத்தில், வெளிப்படைத்தன்மை என்பது வெறும் ஒரு விருப்பமல்ல – அது ஒரு கட்டாயமாகும்.

இந்த காட்சிகளை வெளியிட மறுப்பது நமது ஆளும் நிறுவனங்களின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான அவற்றின் உறுதிப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறித்த காணொளியை வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்கர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன், வடக்கு மாகாணத்திற்கும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post அர்ச்சுனா எம்.பியின் RTI கோரிக்கையை நிராகரித்தது நாடாளுமன்றம் appeared first on Oruvan.com.