putin Archives - Oruvan.com

ஜனாதிபதி புடினைச் சந்திக்க ஈரான் வெளிவிகார அமைச்சர் மொஸ்கோ பயணம்
ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இன்று ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மொஸ்கோ சென்றடையும் அவர், இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது ஈரான் – ரஷ்ய இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி, பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச ரீதியில் நிலவும் போர்ச் சூழல் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஓமானுக்கான விஜயங்களைத் தொடர்ந்து ரஷ்யா சென்றுள்ள Araghchi, போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவின் ஆதரவை நாடியுள்ளதாகக் கருதப்படுகிறது.

இதனிடையே, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் நேரடிப் பேச்சுவார்த்தைக்கான திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார்.

நீண்டதூரப் பயணம் என்பது நேர விரயம் எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரானியர்கள் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் தற்போது தற்காலிகப் போர்நிறுத்த நிலையில் உள்ள போதிலும், ஈரானால் மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை காரணமாக உலகளவில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

இந்த எரிசக்தி நெருக்கடி மற்றும் பிராந்தியப் பதற்றங்களுக்குத் தீர்வு காண ரஷ்யா ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயற்படும் என சர்வதேச அரசியல் அவதானிகள் எதிர்பார்க்கின்றனர்.

The post ஜனாதிபதி புடினைச் சந்திக்க ஈரான் வெளிவிகார அமைச்சர் மொஸ்கோ பயணம் appeared first on Oruvan.com.

ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனில் தனது போர் நோக்கங்களை மாற்றவில்லை – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது போர் நோக்கங்களை மாற்றவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் எச்சரிக்கின்றன.

உக்ரைன் முழுவதையும் இணைத்து, முன்னாள் சோவியத் பேரரசின் சில பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சிகளைத் தொடர புடின் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையுடன் நன்கு அறிந்த ஆறு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரொய்ட்டர்ஸின் கூற்றுப்படி, இந்த அறிக்கைகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது அமைதி பேச்சுவார்த்தையாளர்களின் அறிக்கைகளுக்கு முரணாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புடின் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார் என்று டிரம்பின் குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும், புடினின் நோக்கங்கள் அப்படியே இருப்பதாகவும், முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்குவதாகவும் உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உளவுத்துறையின் இந்த தகவல்கள், ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் அவர்களின் உளவுத்துறை நிறுவனங்களின் கருத்துக்களுடன் ஒத்துப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா தற்போது உக்ரைனின் நிலப்பரப்பில் தோராயமாக 20 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது. இதில் லுஹான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் மாகாணங்களின் பெரும் பகுதிகள், சபோரிஜியா, கெர்சனின் சில பகுதிகள் மற்றும் கிரிமியா ஆகியவை அடங்கும்.

இவை அனைத்தையும் ரஷ்யாவின் ஒரு பகுதி ஆகும் என புடின் கூறுகிறார். இந்த ஆண்டு, ரஷ்ய இராணுவம் தோராயமாக 6,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனில் தனது போர் நோக்கங்களை மாற்றவில்லை – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை appeared first on Oruvan.com.

முக்கிய பகுதிகளை கேட்கும் புடின்… தர மறுக்கும் ஜெலன்ஸ்கி!!
போர் நிறுத்தம் தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் உக்ரைனின் பங்களிப்பு இருக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்நிபந்தனையாக, உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் விடுவிக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் கேட்டுக்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் மூடிய கதவுகளுக்குள் நடந்த அலாஸ்கா சந்திப்பு குறித்து நன்கு அறிந்தவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, மோதலின் மூல காரணங்களை நிவர்த்தி செய்வதற்கான தனது முக்கிய கோரிக்கைகள் என்று அவர் குறிப்பிட்டவறில் சமரசம் செய்யப் போவதில்லை என்று புடின் விளக்கமளித்துள்ளார்.

அதற்கு ஈடாக, ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்திருக்கும் பகுதிகளான கெர்சன் மற்றும் சபோரிஜியாவின் தெற்குப் பகுதிகளில் சண்டையை நிறுத்தவும், கூடுதல் பிரதேசங்களைக் கைப்பற்ற மேலும் தாக்குதல்களை நடத்தமாட்டோம் என்றும் உறுதியளித்தார்.

தொடர்ந்து புடினின் நிலைப்பாடு தொடர்பான தகவலை திங்கட்கிழமை வாஷிங்டனிற்கு வரவுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்துரைத்துள்ளார்.

ஆனால், அதற்கு ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மற்றொரு தகவலின்படி, நேடோ அல்லாத ஆர்டிகள் ஐந்து பாதுகாப்பை உக்ரைனுக்கு வழங்கவது குறித்து ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார். இது நேட்டோவின் முறையான உறுப்பினர் பதவியை வழங்காமல் கூட்டுப் பாதுகாப்பிற்கான உறுதிமொழியாகும்.

இதுதொடர்பான ட்ரம்பின் பரிந்துரைக்கு அலாஸ்கா சந்திப்பின்போது புடினும் தற்காலிகமாக சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பதிலாக அமைதி உடன்படிக்கைக்கு டிரம்ப் அழைப்பு விடுத்து வந்தாலும், முத்தரப்பு உச்சி மாநாடு நடைபெறவில்லை என்றால் மொஸ்கோ மீது வலுவான தடைகளை விதிக்கக் கோரி ஜெலென்ஸ்கி வலியுறுத்தி வருகிறார்.

அதன்படி, “ட்ரம்புடனான எனது உரையாடலில், முத்தரப்பு சந்திப்பு இல்லாவிட்டால் அல்லது ரஷ்யா போருக்கு நேர்மையான முடிவைத் தவிர்க்க முயன்றால் தடைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று நான் கூறினேன்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இரண்டின் ஈடுபாட்டுடன், பாதுகாப்பு நம்பகமானதாகவும் நீண்ட கால ரீதியாகவும் உறுதி செய்யப்பட வேண்டும்.

உக்ரைனுக்கு முக்கியமான அனைத்து பிரச்சினைகளும் உக்ரைனின் பங்கேற்புடன் விவாதிக்கப்பட வேண்டும், மேலும் எந்தப் பிரச்சினையும், குறிப்பாக பிராந்திய பிரச்சினைகளை, உக்ரைன் இல்லாமல் முடிவு செய்ய முடியாது” என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ச்சியான ராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் நட்பு நாடுகளுடன் ஒரு வீடியோ காலை கூட்டி, ஜெலென்ஸ்கியின் வாஷிங்டன் வருகைக்கு முன்னதாக உத்திகளை வகுக்க உள்ளன.

அலாஸ்கா பேச்சுவார்த்தைகள் போர்நிறுத்தத்தை உருவாக்கத் தவறியதைத் தொடர்ந்து, ஜெலென்ஸ்கி, புடின் மற்றும் ட்ரம்ப் பங்கேற்கும் உச்சிமாநாட்டை மூன்று ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்துகின்றன.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சூழலை சர்வதேச அழுத்தம் உருவாக்கி வந்தாலும், பிராந்தியப் பிரச்சினைகளில் கீவ் மற்றும் மொஸ்கோ இன்னும் ஒற்றை நிலைப்பாட்டை எட்டாதது பலவீனமான முன்னேறத்தை காட்டுகிறது.

The post முக்கிய பகுதிகளை கேட்கும் புடின்… தர மறுக்கும் ஜெலன்ஸ்கி!! appeared first on Oruvan.com.

போர் நிறுத்தத்திற்கு இணங்குமாறு புடினுக்கு ஐரோப்பிய தலைவர்கள் அழுத்தம்
நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அழைப்பு விடுப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

புடின் இதற்கு மறுப்பு தெரிவித்தால் ரஷ்யா மீது மேலும் பாரிய தடைகளை விதிக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைனில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மூன்று ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதன் ஒரு பகுதியாக 30 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள ரஷ்யா மீது அழுத்தம் கொடுத்துள்ளனர், மாஸ்கோ மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

ரஷ்யாவுடனான இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உக்ரைன் இணக்கம் தெரிவித்துள்ளது.

The post போர் நிறுத்தத்திற்கு இணங்குமாறு புடினுக்கு ஐரோப்பிய தலைவர்கள் அழுத்தம் appeared first on Oruvan.com.

உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் – புடின் அறிவிப்பு
உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

அமைதியான இயக்கங்களுக்கு ரஷ்யா பலமுறை தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. உக்ரைன் தலைமையும் அவ்வாறே உணரும் என்று தான் நம்புவதாக புடின் கூறினார்.

ரஷ்ய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வழி மூலம் புடின் இந்தக் கொள்கையை வெளிப்படுத்தினார்.

உக்ரைன், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் பிரதிநிதிகள் லண்டனில் போர்நிறுத்தத் திட்டம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தபோது புடினின் நிலைப்பாடு வெளியாகியுள்ளது.

நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுப்பதே லண்டன் பேச்சுவார்த்தையின் குறிக்கோளாக இருக்கும் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

இதற்கிடையில், ரஷ்யாவிற்கு மிகவும் சாதகமான ஒரு சமாதான ஒப்பந்தத்தை தரகு நிறுவனமாக அமெரிக்க நிர்வாகம் செயல்படுத்தி வருவதாக கார்டியன் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி வழங்கப்படாது என்றும், 2022 இல் ரஷ்யா கைப்பற்றிய சபோரிஷியா அணுமின் நிலையம் நடுநிலை மண்டலத்தின் ஒரு பகுதியாக மாறும் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன.

இதற்கிடையில், திங்கட்கிழமை இரவு உக்ரைன் மீது ரஷ்யா பெரும் தாக்குதலை நடத்தியது. துறைமுக நகரமான ஒடெசாவில் நடந்த தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன.

ஒடெசாவின் குடியிருப்பு பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக மேயர் ஜெனடி ட்ருகானோவ் தெரிவித்தார். மேலும், ரஷ்யா ஏவிய 54 ட்ரோன்களில் 38 ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை அறிவித்தது.

The post உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் – புடின் அறிவிப்பு appeared first on Oruvan.com.

புடினுக்கு எதிராக கொலை முயற்சி? வாகனத் தொடரணியில் கார் வெடிப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வாகன அணிவகுப்பில் இருந்த கார் வாகனம் வெடித்து சிதறியது.

டொஸ்கோவில் உள்ள FSB (கூட்டாட்சி பாதுகாப்பு சேவை) தலைமையகம் அருகே கார் தீப்பிடித்தது. குறித்த சம்பவத்தின் போது காரில் யாராவது இருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அந்த சொகுசு கார் வெடித்து பின்னர் தீப்பிடித்து எரிந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கார் தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

காரில் இருந்து கடும் புகை எழுவதையும், அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சிப்பதையும் காட்சிகள் காட்டுகின்றன. காரின் இயந்திரப் பகுதியில் தொடங்கிய தீ, உட்புறம் முழுவதும் பரவியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு வதந்திகளும் விவாதங்களும் தொடங்கியுள்ளன.

விரிவான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரில் ஏற்பட்ட தீ விபத்து, புடின் மீதான கொலை முயற்சியா என்று பலர் விசாரித்து வருகின்றனர். இந்த கார் பல கோடி ரூபாய் மதிப்புடையதாகும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புடினுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

புடின் விரைவில் இறந்துவிடுவார் என்றும் ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்றும் ஜெலென்ஸ்கி கூறினார்.

The post புடினுக்கு எதிராக கொலை முயற்சி? வாகனத் தொடரணியில் கார் வெடிப்பு appeared first on Oruvan.com.

டிரம்புடன் பேச்சுவார்த்தை – முழுமையான போர்நிறுத்தத்தை புறக்கணித்தார் புடின்
உக்ரைனின் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும், 30 நாள் முழுமையான போர்நிறுத்தத்தை அங்கீகரிக்க புடின் மறுப்பு தெரிவித்துள்ளதாக சர்சதேக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செவ்வாயன்று டிரம்ப் மற்றும் புடின் இடையே தொலைபேசிவழியாக இடம்பெற்ற நீண்ட நேர கலந்துரையாடலை தொடர்ந்து, நிரந்தர அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, எரிசக்தி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை 30 நாட்களுக்கு நிறுத்துவதற்கான திட்டத்தை தனது நாடு ஆதரிக்கும் என்றார்.

இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியாக, எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினைகளில் வரையறுக்கப்பட்ட போர்நிறுத்தத்திற்கு டிரம்பும் புடினும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவருகிறது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்படும் இராணுவ மற்றும் உளவுத்துறை உதவிகளை நிறுத்துமாறு இந்த கலந்துரையாடலின் போது புடின் டிரம்பிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும், போரில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட நிலம் மற்றும் அப்பகுதியில் உள்ள பல்வேறு மின் உற்பத்தி நிலையங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று புடின் கூறியிருந்தார்.

இந்நிலையில், எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்குவது தொடர்பான போர்நிறுத்தம் ரஷ்யாவிற்கு பயனளிக்கும் என்று வாஷிங்டனை தளமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த சக ஊழியர் மரியா ஸ்னேகோவயா கூறினார்.

இந்த கலந்துரையாடலை தொடர்ந்து தானும் புடினும் ஒரு போர்நிறுத்தத்தையும் இறுதியில் ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்தையும் நோக்கி விரைவாகச் செயல்பட ஒப்புக்கொண்டதாகக் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் ரஷ்யா 40க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி, சுமி மற்றும் உக்ரைன் தலைநகரைச் சுற்றியுள்ள கீவ் பகுதி உட்பட பிற பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டிரம்புடன் பேச்சுவார்த்தை – முழுமையான போர்நிறுத்தத்தை புறக்கணித்தார் புடின் appeared first on Oruvan.com.

உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் – புடின் அறிவிப்பு
உக்ரைன் போர்நிறுத்த திட்டம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான முயற்சிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

போர் நிறுத்தத்திற்கு உடன்படுங்கள்

ரஷ்யா விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்கிறது என்று விளாடிமிர் புடின் கூறியுள்ளார். எனினும், நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் நெருக்கடியின் மூல காரணங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

புடின் என்ன சொன்னார்?

வியாழக்கிழமை பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய விளாடிமிர் புடின், விரோதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்களுடன் ரஷ்யா உடன்படுகிறது என்றார்.

ஆனால் இந்த போர் நிறுத்தம் நீண்டகால அமைதியைக் கொண்டுவரவும் நெருக்கடியின் மூல காரணங்களை அகற்றவும் விரும்புகிறது என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த பெப்ரவரி தொடக்கத்தில், ரஷ்யா-உக்ரைன் மோதலைத் தீர்க்க டொனால்ட் டிரம்பின் முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றிருந்தார்.

மேலும் பேச்சுவார்த்தை மேசையில் மோதலைத் தீர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இந்த மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு நடுநிலையானது அல்ல, மாறாக அது அமைதிக்கு ஆதரவானது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களையும் தான் சந்தித்திருப்பதாக பிரதமர் வலியுறுத்தினார், மேலும் ரஷ்ய ஜனாதிபதி புடின் முன்னிலையில் “இது போரின் சகாப்தம் அல்ல” என்று தான் கூறியதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

The post உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் – புடின் அறிவிப்பு appeared first on Oruvan.com.

நவால்னியின் மரணத்திற்கு புடின் தான் ‘இறுதிப் பொறுப்பு’ – ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மறைவுக்கு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான் “இறுதி பொறுப்பு” என்று ஐரோப்பிய ஒன்றியம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

அவரது மறைவின் ஒரு ஆண்டு நிறைவையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ், நவால்னி “சுதந்திரமான மற்றும் ஜனநாயக ரஷ்யாவிற்காக தனது உயிரைக் கொடுத்தார்” என்றும், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

“ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அரசியல்வாதி அலெக்ஸி நவால்னி இறந்து இன்று ஒரு வருடம் ஆகிறது, இதற்கு ஜனாதிபதி புடினும் ரஷ்ய அதிகாரிகளும் இறுதிப் பொறுப்பேற்கிறார்கள்” என்று கல்லாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அரசாங்க ஊழலுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த புடினின் முக்கிய எதிரியான நவால்னி ஒரு வருடம் முன்பு தொலைதூர ஆர்க்டிக் தண்டனைக் காலனியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தார்.

அவரது மரணத்தை ரஷ்ய அதிகாரிகள் ஒருபோதும் முழுமையாக விளக்கவில்லை, அவர் சிறை முற்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது உயிரிழந்ததாக கூறினர்.

“ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரை தீவிரப்படுத்துகையில், ஜனநாயகத்திற்காக நிற்பவர்களை குறிவைத்து அதன் உள் அடக்குமுறையையும் தொடர்கிறது” என்று கல்லாஸ் கூறினார்.

நவல்னியின் சட்டத்தரணிகள் “நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளுடன் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“ரஷ்யா உடனடியாகவும் நிபந்தனையின்றியும் அலெக்ஸி நவல்னியின் சட்டத்தரணிகளையும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்,” என்று கல்லாஸ் வலியுறுத்தியுள்ளார்.

புடினின் முக்கிய எதிரியான நவல்னி ரஷ்ய அதிகாரிகளால் “தீவிரவாதி” என்று அறிவிக்கப்பட்டார், அவர் இறந்த போதிலும் இந்த தீர்ப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளது.

இது ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்பு வந்தது, இது புடினின் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான ஆட்சியை நீட்டித்தது.

ரஷ்யாவில், நவல்னி அல்லது அவரது ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளையைப் பற்றி “தீவிரவாதி” என்று அறிவிக்கப்பட்டதாகக் கூறாமல் குறிப்பிடும் எவருக்கும் அபராதம் அல்லது நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

47 வயதான நவல்னி இறக்கும் வரை, ரஷ்யர்கள் கிரெம்ளினை எதிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து அழைப்பு விடுத்ததுடன், சிறை கம்பிகளுக்குப் பின்னால் இருந்தும் மொஸ்கோவின் உக்ரைன் தாக்குதலைக் கண்டித்தார்.

The post நவால்னியின் மரணத்திற்கு புடின் தான் ‘இறுதிப் பொறுப்பு’ – ஐரோப்பிய ஒன்றியம் appeared first on Oruvan.com.

உக்ரெய்ன் உடனான போரில் சமரசம் செய்துக் கொள்ள தயார் – புடின்
உக்ரெய்ன் உடனான போரில் சமரசம் செய்துக் கொள்ள தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

இதன்படி அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உக்ரெய்ன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்தவொரு நிபந்தனையும் இல்லை என்றும் அவர் கூறியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரெய்ன் மற்றும் ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உட்பட பலநாடுகள் முயற்சிக்கும் நிலையில் போர் தற்போது

வரை இடம்பெறுகிறது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போதே தான் பதவியேற்ற அடுத்த 24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் உக்ரெய்ன் மற்றும் ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாவும்

ட்ரம்ப் தெரிவித்திருந்தார் இந்நிலையில் உக்ரெய்ன் உடனான போரில் சமரசம் செய்துக் கொள்ள தயார் என புடின்

அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post உக்ரெய்ன் உடனான போரில் சமரசம் செய்துக் கொள்ள தயார் – புடின் appeared first on Oruvan.com.