Presidential Archives - Oruvan.com

ஜனாதிபதி நிதியம் டிஜிட்டல் மயமாகிறது – மருத்துவ விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு
ஜனாதிபதி நிதியத்தை பிரதேச செயலகங்கள் ஊடாக பரவலாக்கி டிஜிட்டல் மயப்படுத்தியதன் விளைவாக, ஓராண்டு காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 59% ஆல் அதிகரித்துள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு 5,277 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இது 2024 இல் 3,313 ஆகவும், 2023 இல் 3,456 ஆகவும் காணப்பட்டது.

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டதன் விளைவாக, 2024 ஆம் ஆண்டை விட 2025 இல் 1,964 மேலதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இவர்களில் 70% க்கும் அதிகமானோருக்கு தற்போது மருத்துவ உதவிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதில் வடக்கு மாகாணத்தில் 253%, கிழக்கு மாகாணத்தில் 135%, மத்திய மாகாணத்தில் 116% மற்றும் ஊவா மாகாணத்தில் 108% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தீவு முழுவதிலுமுள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் விண்ணப்பங்களை ஏற்கும் பணி 2025 பெப்ரவரி 07 முதல் ஆரம்பமானது.

இந்தத் திட்டம் வெற்றியடைந்துள்ளதால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளும் பரவலாக்கப்பட்டுள்ளன. இதன்படி, வறுமை ஒழிப்பு மானியங்கள், கல்வி புலமைப்பரிசில்கள், விசேட தேவையுடையோருக்கான உதவிகள், காட்டு யானைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான நிவாரணங்கள் மற்றும் இடர் கால உதவிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இப்போது இணைய வழியாக (Online) அல்லது எந்தவொரு பிரதேச செயலகம் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் 47 வருடங்களாக கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தற்போது நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலகுவாகக் கிடைக்கப்பெறுகின்றன.

The post ஜனாதிபதி நிதியம் டிஜிட்டல் மயமாகிறது – மருத்துவ விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு appeared first on Oruvan.com.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஜனாதிபதி நிதியத்தை சரியான திசைக்கு கொண்டு வந்துள்ளோம் – பிரதமர்
கடந்த ஆட்சியின் போது, அதிகாரத்திலிருந்த குழுக்களால் ஜனாதிபதி நிதியம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்த நிலையில்

இந்த அரசாங்கத்தினால் சரியான திசைக்கு கொண்டு வர முடிந்ததாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்து பெறுபேறு பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு

கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (14) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்

போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

“ஜனாதிபதி நிதியம் நிறுவப்பட்டதற்கான உண்மையான நோக்கம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது. தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு வசதிகளை வழங்க ஜனாதிபதி நிதியம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

மருத்துவ உதவிக்கு அப்பாற்பட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்த ஜனாதிபதி நிதியம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது, மாணவர்களின் கல்விக்கு உதவும் ஒரு திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம், அறிவு நிறைந்த சிறந்த எதிர்கால மனித வளத்தை உருவாக்க பங்களிக்கும்.

ஒரே கட்டமைப்பின் கீழ் இருக்கும் கல்வி முறைக்குப் பதிலாக, பல்வேறு துறைகளைப் பார்க்கும் மற்றும் திறந்த மனதைக் கொண்ட மனித வளத்தை உருவாக்க புதிய கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம்

இது மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க உதவும்” என்றார்.

இந்த நிகழ்வில், கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 06 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. ஜனாதிபதி நிதியம் இதற்காக 36.1 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.

The post துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஜனாதிபதி நிதியத்தை சரியான திசைக்கு கொண்டு வந்துள்ளோம் – பிரதமர் appeared first on Oruvan.com.

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து சட்டமூலம் – உயர் நீதிமன்றின் தீர்மானம்
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது.

இன்றைய சபை அமர்வின் ஆரம்பித்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவித்தார்.

இதன்படி குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

The post ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து  சட்டமூலம் – உயர் நீதிமன்றின் தீர்மானம் appeared first on Oruvan.com.

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் இடையே சந்திப்பு
இலங்கைக்கு வருகை தந்துள்ள டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் பிரான்சுவா வெலரியன் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (29) பிற்பகல் நடைபெற்றது.

அரச மற்றும் தனியார் துறைகளில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரான்சுவா வெலரியனுக்கு விளக்கிய ஜனாதிபதியின் செயலாளர்,

ஊழல் எதிர்ப்பு இயந்திரத்தை வலுப்படுத்த அரசாங்கம் பல புதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது என்றும் அவை ஏற்கனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன

என்றும் குறிப்பிட்டார்.

இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல்,அரச நிதியை திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்தல் மற்றும் நாட்டில் சிறந்த கலாச்சாரத்தை உருவாக்குதல் ஆகிய பரந்த நோக்கங்களுடன் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.

இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க அரச நிறுவனங்களுக்குள் உள் விவகாரப் பிரிவுகளை நிறுவுவதையும், கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் பாராட்டிய டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனலின் தலைவர், ஊழல் எதிர்ப்பு இலக்குகளை முன்னேற்றுவதில் அரசாங்கமும் சிவில் சமூகமும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இலங்கையின் ஊழல் எதிர்ப்புத் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

The post டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.

‘இந்தியா’ கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு
இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடவுள்ளார். பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் கடந்த மாதம் 21ஆம் திகதி ராஜி​னாமா செய்​தார்.

இதனையடுத்து புதிய குடியரசு துணைத் தலைவரை தெரிவுசெய்வதற்கான தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம்,

போட்டி இருந்தால், அடுத்த மாதம் 09 ஆம் திகதி வாக்குப்பதிவு நடை​பெறும் என்று அறி​வித்​துள்​ளது.

The post ‘இந்தியா’ கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு appeared first on Oruvan.com.

தென்கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல்
தென்கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெற்று வருகிறது.

52 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் சுமார் 44.4 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள கொரியர்கள் ஏற்கனவே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துவிட்டனர்.

எதிர்க்கட்சியின் லீ ஜே-மியுங் முன்னணியில் உள்ளதாகவும் யூனின் அமைச்சரவையின் முன்னாள் உறுப்பினரான ஆளும் கட்சியின் கிம் மூன்-சூ,  அவரை விட பின்தங்கியுள்ளதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தென்கொரியாவில் இராணுவ அவசர நிலையை செயற்படுத்தியதற்காக அப்போதைய ஜனாதிபதி யூன் சுக்-இயோலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனையடுத்து அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தென்கொரிய அரசியலமைப்பின்படி ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டால் அடுத்த 02 மாதங்களுக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்.

இதனைத் தொடர்ந்து ஜூன் 03 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால ஜனாதிபதி ஹான் டக்-சூ அறிவித்தார்.

The post தென்கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல் appeared first on Oruvan.com.

ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு- CID விசாரணை ஆரம்பம்
ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 பேர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் B அறிக்கையை சமர்ப்பித்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியவர்களுள் பிரபல அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் உள்ளடங்குவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு-  CID விசாரணை ஆரம்பம் appeared first on Oruvan.com.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெறவில்லை – முன்னாள் எம்.பி
ஜனாதிபதி நிதியத்தின் நிதியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில், வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் விளக்கமளித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் சிறிசேன தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்ததாக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டார்.

அதன்பின்னனர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கண், காது மற்றும் வயிற்றில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவருக்கு செவிப்புல வெடிப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் சிறிசேன தனது சொந்த சொத்துக்களில் இருந்து 4.5 மில்லியன் ரூபாவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிகிச்சைகளுக்காக செலவிட்டதாக மேலும் தெரிவித்தார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

2011 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 300,000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால் உரிய முறையில் சரிபார்க்காமல் அமைச்சர் தரவுகளை முன்வைத்திருக்கிறார்.

தேசிய சொத்துக்களை தவறாக பயன்படுத்துவது பாரிய குற்றம் மற்றும் மோசடி செயல், இதனால் நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் வெளியிடப்படும் அறிக்கைகள் குறித்து அமைச்சர் கவனமாக இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பெயர் வெளியிடப்பட்ட பின்னரே பணம் ஒதுக்கப்பட்டமை தெரியவந்தது. ஆனால் அது எனக்கு கிடைக்கவில்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அமைச்சர் கூறுவது போன்று ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றதாக கூறப்படும் நபர்களின் பட்டியலிலிருந்து எனது பெயரை நீக்க வேண்டும்” என்றார்.

The post ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெறவில்லை –  முன்னாள்  எம்.பி appeared first on Oruvan.com.