#police Archives - Oruvan.com

யாழில் கிணறு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இணுவில் வடகிழக்கு பூவோடைப் பகுதியில் உள்ள தோட்டக் காணியில் உள்ள கிணற்றிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை கிணற்றில் சடலம் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post யாழில் கிணறு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு appeared first on Oruvan.com.

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம் – பெண் வௌியிட்ட பகீர் தகவல்கள்
மட்டக்களப்பில் நகைக்காக கடந்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வாக்குமூலம் அளிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர்,

நான் அற்றைய தினம் காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பிற்குச் செல்வதற்காக, எனது குழந்தையுடன் வவுணதீவு சந்தி பேருந்து நிலையத்திற்குச் சென்றிருந்தேன்.

அங்கு ஒரு வயோதிபப் பெண்ணும் பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு முச்சக்கரவண்டி எங்களை எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டது.

நான் மட்டக்களப்பு நகருக்குச் செல்ல வேண்டும் என்று கூறியபோது, எம்மை ஏறுமாறு கூறினர்.

என்னிடம் போதிய பணம் இல்லை என்று கூறியபோது, 100 ரூபா மட்டும் தருமாறு கூறினர். அதனை ஏற்று நானும் அந்த வயோதிபப் பெண்ணும் அதில் ஏறினோம்.

முச்சக்கரவண்டி நகரை நோக்கிச் சென்றபோது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் அந்த வயோதிபப் பெண் இறங்கிக்கொண்டார். பின்னர், என்னை எங்கு விட வேண்டும் என்று கேட்டபோது, சத்தார் புடவைக்கடை வீதியில் விடுமாறு கூறினேன்.

அங்கு என்னை இறக்கிவிடும்போது, அந்த முச்சக்கரவண்டியில் இருந்த ஒரு பெண், தான் சேலை (Saree) எடுக்கப் போவதாகவும், அதுவரை தன்னுடன் வருமாறும் என்னைக் கேட்டுக்கொண்டார். நான் சேலை கடைக்கு முன்னால் காத்திருப்பதாகக் கூறினேன்.

நான் குழந்தையுடன் அருகிலிருந்த நகைக்கடைக்குச் சென்று, அடகு வைத்திருந்த தங்க மோதிரத்தை 24,000 ரூபா செலுத்தி மீட்டுக்கொண்டேன்.

மீண்டும் அந்தப் பெண் சொன்ன கடைக்கு வந்தபோது, அவர் முச்சக்கரவண்டி ஓட்டுநருடன் தொலைபேசியில் பேசிவிட்டு, எங்களை மணிக்கூட்டுக் கோபுரப் பகுதிக்கு வருமாறு கூறினார்.

நானும் அந்தப் பெண்ணும் அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுரம் நோக்கிச் சென்று, மீண்டும் அதே முச்சக்கரவண்டியில் ஏறினோம்.

தொடர்ந்து முச்சக்கரவண்டி பொதுச்சந்தை வீதி வழியாகச் சென்று ஓரிடத்தில் நின்றது. அங்கிருந்து பிரதான பேருந்து நிலைய வீதியூடாக வவுணதீவு நோக்கிப் பயணித்தது.

வலையிறவுப் பாலத்தைக் கடக்கும்போது, அந்தப் பெண் மூன்று குளிர்பானப் (Juice) போத்தல்களை வாங்கினார்.

எனது மகளுக்கும் அவருக்கும் பச்சை நிறக் குளிர்பானத்தையும், எனக்கு விளாம்பழக் குளிர்பானத்தையும் தந்தார். நான் அதனை அருந்தினேன்.

வவுணதீவு சந்தியில் அந்தப் பெண் இறங்கிக்கொண்டார். அதன் பின்னர், ஒரு இளைஞன் கையில் கத்தியுடன் (தாள்கத்தி) அந்த முச்சக்கரவண்டியில் ஏறினார்.

அவர் ஏன் கத்தியுடன் ஏறுகிறார் என்று நான் கேட்டபோது, மாட்டிற்குப் புல் வெட்டுவதற்காகச் செல்வதாகக் கூறினர். நான் என்னை தாண்டியடியில் இறக்கிவிடுமாறு கேட்டபோது, அதற்குச் சம்மதித்தனர்.

ஆனால், முச்சக்கரவண்டி கன்னங்குடா சந்தியூடாகத் தாண்டியடி நோக்கிச் செல்லாமல், பாவற்கொடிச்சேனை பகுதியை நோக்கிச் சென்றது.

ஏன் இந்த வீதியில் செல்கிறீர்கள் என்று கேட்டபோது, அந்த இளைஞனை இறக்கிவிட்டு என்னை விடுவதாகக் கூறினர். அடுத்த சில நிமிடங்களில் நான் மயக்கமடைந்தேன்.

நான் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, நான் நீரில் மூழ்கியிருந்தேன். மேலே பார்த்தபோது வானம் தெரிந்தது.

“வீட்டில் வெள்ளம் ஏறிவிட்டதா? ஏன் வானம் தெரிகிறது?” என்று குழப்பமடைந்த நிலையில், தப்பிப்பதற்காக நீரில் மூழ்கி எழுந்தேன்.

இரண்டு மூன்று முறை நீரில் மூழ்கி எழுந்த பின், “அம்மா, அம்மா” என்றும் எனது கணவரைப் பெயரிட்டும் சத்தமிட்டேன். “மீன்பிடிக்கச் சென்றவர் இவ்வளவு நேரமாக என்ன செய்கிறீர்கள்?” என்று கத்தினேன்.

அதன் பின்னரே எனது பிள்ளையைத் தேடி அலறினேன். அப்போது யாரோ ஒரு சிலர் வந்து எனது கையில் கயிற்றைக் கொடுத்து என்னைக் காப்பாற்றினார்கள் என தெரிவித்தார்.

The post மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம் – பெண் வௌியிட்ட பகீர் தகவல்கள் appeared first on Oruvan.com.

ஓமானில் கைதான மிதிகம சூட்டி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிட்ட படுகொலைச் சம்பவங்கள், பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதப் பரிமாற்றங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்ட ராஜபக்ச பத்திரணகே பிரபாத் மதுசங்க அல்லது ‘மிதிகம சூட்டி’ என்பவர் இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

சர்வதேச பொலிஸாரினால் விடுக்கப்பட்டிருந்த ‘சிவப்பு அறிவித்தலுக்கு’ (Red Notice) அமைய, ஓமான் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த இவர், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விசேட குழுவொன்றினால் பொறுப்பேற்கப்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டார்.

​தென்னிலங்கையில் இடம்பெற்ற பல மனிதப் படுகொலைகளின் பின்னணியில் சூத்திரதாரியாகச் செயற்பட்டமை மற்றும் சர்வதேச வலையமைப்புகளுடன் இணைந்து நாட்டுக்குள் போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுத்தமை போன்ற பாரிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, பாதாள உலகக் குழுக்களுக்குத் தேவையான நவீன ரக ஆயுதங்களை விநியோகித்தமை தொடர்பிலும் பொலிஸார் இவரிடம் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள இவரிடம், வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஏனைய பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நிதி மூலாதாரங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவரை நாட்டுக்கு அழைத்து வந்தமை, இலங்கையில் திட்டமிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

The post ஓமானில் கைதான மிதிகம சூட்டி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார் appeared first on Oruvan.com.

யாழில் உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மணல் ஏற்றி உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றுள்ளனர்.

இதன்போது, உழவு இயந்திரத்தை இயக்கிய நபர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸார் மீது மோதிவிட்டுத்

தப்பிச் சென்றுள்ளார்.

இந்த மோதலில் பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,தப்பிச் சென்ற சாரதியைக் கைது செய்ய விஷேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

The post யாழில் உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

இரு பேருந்துகள் மோது கோர விபத்து – நால்வர் பலி
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

The post இரு பேருந்துகள் மோது கோர விபத்து – நால்வர் பலி appeared first on Oruvan.com.

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை
பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் புதன்கிழமை (18) ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.

ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் முதலை கடித்து உள்ளதா? அல்லது தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதா என அங்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 5 அடி 6 அங்குலம் உயரம் மற்றும் சுமார் 45 வயது முதல் 50 வயது வரை மதிக்கத்தக்க சடலத்தை அக்கரைப்பற்று பொலிஸாருடன் இணைந்து அம்பாறை தடயவியல் பிரிவு பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் சடலத்தை கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன் மீட்கப்பட்ட இச்சடலம் நீண்ட நாட்கள் உயிரிழந்த நிலையில் காணபட்டுள்ளதுடன் சடலம் இனங்காண முடியாத வகையில் சிதைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் காணாமல் சென்ற நபர்கள் தொடர்பில் எதுவித முறைப்பாடுகளும் இல்லை என்பதுடன் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உயிரிழந்தவரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவிகளை நாடியுள்ளனர்.

அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனைக்கு அமைய அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழிகாட்டுதலில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை appeared first on Oruvan.com.

முச்சக்கர வண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
மொரட்டுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மொரட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு 7.30 மணியளவில் 119 அவசர எண்ணுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் குழு ஒன்று சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் சடலத்தை மீட்டுள்ளனர்.

அவரது உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வேறு எங்காவது வெட்டிக் கொல்லப்பட்டு பின்னர் இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் மொரட்டுவ முல்ல பகுதியைச் சேர்ந்த ‘சுரா’ என்று அழைக்கப்படும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை வழக்கில் சந்தேக நபர் என்றும், தற்போது மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

The post முச்சக்கர வண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் appeared first on Oruvan.com.

கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு, ஞானசேன மாவத்தையில் வசித்து வந்த 37 வயதுடைய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்தப் படுகொலை எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, ஒரு தொகுதி குஷ் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ 154 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் வேயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு appeared first on Oruvan.com.

மத்திய கிழக்கு நாடுகளில் நிழவும் போர் பதற்றம் – கொழும்பில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் ஹோட்டல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் ஹோட்டல்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து தொடர்புடைய பிரிவுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் சூழ்நிலைக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் யாரும் தூதரக வளாகத்திற்குள் நுழையவோ அல்லது கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவோ முயற்சிப்பதைத் தடுப்பதில் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தூதரகத்திலும் 24 மணி நேர பாதுகாப்பை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அதிகாரிகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நடமாடும் ரோந்துப் பிரிவுகள், தூதரக மண்டலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் தொடர்ந்து இருப்பைப் பராமரிக்கவும், பாதுகாப்பு மீறல்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

சாத்தியமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், நாடு முழுவதும் உள்ள சபாத் மையங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post மத்திய கிழக்கு நாடுகளில் நிழவும் போர் பதற்றம் – கொழும்பில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு appeared first on Oruvan.com.

இங்கிலாந்தின் ‘மிகவும் ஆபத்தான’ 10 பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் ‘மிகவும் ஆபத்தான’ 10 பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன.

நகர பாதுகாப்பு குறியீட்டின் சமீபத்திய குற்ற புள்ளிவிவரங்களுக்கு அமைய, அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட 10 பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, “மிகவும் ஆபத்தான” பகுதி பட்டியலில் முதலிடத்தில் லண்டன் பெருநகரமான கேம்டன் ஆகும்.

இந்தப் பகுதி துன்புறுத்தல், சமூக விரோத நடத்தை மற்றும் வன்முறை சீர்குலைவு சம்பவங்களுக்குப் பெயர் பெற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக, இஸ்லிங்டன் இடம்பெற்றுள்ளது. இங்கு கொள்ளை மற்றும் திருட்டுகள் குற்றங்கள் அதிகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மிகவும் ஆபத்தான இடங்களில் நாட்டிங்ஹாம் இடம் பெற்றுள்ளது.

மான்செஸ்டர் இங்கிலாந்தின் பத்தாவது ஆபத்தான நகரமாக மதிப்பிட்டுள்ளது.

ஒன்பதாவது இடத்தில் லெய்செஸ்டரும், நியூகேஸில் அபான் டைன் எட்டாவது இடத்திலும், மிடில்ஸ்பரோ ஏழாவது இடத்திலும் உள்ளன.

பிளாக்பூல் ஆறாவது ஆபத்தான நகரமாக பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இங்கிலாந்தின் ‘மிகவும் ஆபத்தான’ 10 பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன. appeared first on Oruvan.com.